முதலமைச்சர் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி: பொன்னையன்
முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் பொன்னையன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 58 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா குணம் அடைந்ததை அடுத்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் அவர் வீடு திரும்பலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டதை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆடிப்பாடியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தற்போது சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண நலமுடன் உள்ளதாக தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் அவர் பணிக்கு திரும்புவார் எனவும் கூறினார். மேலும் நான்கு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெறும். முதல்வர் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications