ஜெயலலிதா நலம் பெற விழைவு.. மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற விழைவு என தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற விழைகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதே போன்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலினும் முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கும் மேல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. இதனையடுத்து, முதல்வர் உடல் நிலை குணம் அடைய வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் தங்களது விருப்பங்களை வெளியிட்டு வருகின்றனர்.

karunanidhi stalin

இந்நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் தலைவர் மு. கருணாநிதி, "தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் பூரண நலம் பெற விழைகிறேன்" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதனைப் போன்றே, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், "முதல்வருக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சைகள் பலனளித்து விரைவில் நலம் பெற விரும்புகிறேன்" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முதல்வர் நலம் பெற வேண்டும் என்ற தங்களது விருப்பங்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டும் தங்களது விருப்பங்களை வெளியிட்டுள்ளனர்.

தமிழக பாஜகவின் தலைவரான தமிழிசை, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்து வருவதாக செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+