68வது பிறந்தநாள்.. 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்... ஜெ. தொடங்கி வைத்தார்!
சென்னை: வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆல மரக்கன்றுகளை நட்டு, முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வனத்துறை மற்றும் ஊரக வளர்சித் துறை சார்பில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தத் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆல மரக்கன்றினை நட்டு, இந்தத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், 'தோப்பு' வெங்கடாச்சலம், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டத்தின் படி, வருகிற டிசம்பர் மாதத்துக்குள் தமிழகம் முழுவதும் சாலை, பள்ளி வளாகங்கள் மற்றும் சாலையோரம் என மொத்தம் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications