அடுத்த வாரம் முதல்வராகப் பதவியேற்பார் ஜெயலலிதா... சொல்கிறார் சி.ஆர். சரஸ்வதி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அடுத்த வாரம் முதல்வராகப் பதவியேற்பார் என்று அதிமுக பேச்சாளரும், நடிகையுமான சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
தீர்ப்பு வந்து இத்தனை நாட்களாகியும் இன்னும் வீட்டை விட்டுக் கூட வெளியே வராமல் இருந்து வருகிறார் ஜெயலலிதா. இந்த நிலையில், அடுத்த வாரம் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பார் என்று சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சி.ஆர். சரஸ்வதி பேட்டி தருகையில், அம்மா தற்போது தீர்ப்பை முழுமையாக படித்து வருகிறார். முழுமையாக படித்து முடித்தவுடன் முதல்வராகப் பதவியேற்பார். அனேகமாக அடுத்த வாரமே அவர் பதவியேற்பார். நல்ல நேரத்திற்காகவும் அவர் காத்திருக்கிறார்.
திமுக உள்ளிட்ட கட்சிகள், தப்புக் கணக்கால்தான் ஜெயலலிதா விடுதலையாகி விட்டதாக கூறி வருகிறாரக்ள். இது தவறானது. தீர்ப்பை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வேறு மாதிரியாக வந்திருக்கும் என்று காத்திருந்தார்கள். குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க திமுகவும் காத்திருந்தது. ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு அவர்களின் எண்ணத்தில் மண்ணை போட்டு விட்டது.
ஆனால் சொத்துக்களின் மதிப்பும், அவற்றின் அப்போதைய மதிப்பும், இப்போதைய மதிப்பும் நிச்சயம் வேறுபட்டுள்ளது என்று நீதிபதி தெளிவாகச் சொல்லியுள்ளார் தனது தீர்ப்பில். இப்போதைய மதிப்பை வைத்து அதை கணக்கிடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் மிகப் பெரிய ஹீரோயினாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரிந்தது. லட்சக்கணக்கில் சம்பாதித்தவர். சொத்துக் கணக்காகக கூறப்பட்ட ஒரு வீட்டை அவர் வாங்கவில்லை. மாறாக அவரது தாயார் வாங்கிய வீடு அது. வரியை முழுமையாக செலுத்தி வருபவர் ஜெயலலிதா என்றார் சரஸ்வதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications