என்னமா ப்ளான் பண்றாங்கப்பா!
Recommended Video

சென்னை: "எதுவா இருந்தாலும் ப்ளான் பண்ணி, பண்ணனும்.. ஓகேஏஏ" என்ற போக்கிரி திரைப்படத்து வடிவேலு பாணியில், ரொம்பவே ப்ளான் செய்து களமிறங்கியுள்ளது டிடிவி தினகரன் தரப்பு.
இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஒரு வீடியோவை வெளியிட்டு இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ என்றார்.
அந்த வீடியோ, உண்மையா பொய்யா என்ற சர்ச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தபோதே, தேர்தல் ஆணையம், இந்த வீடியோக்களை ஒளிபரப்ப கூடாது என மீடியாக்களுக்கு அறிவுறுத்தியது.

வெற்றிவேல் சிக்குகிறார்
தேர்தலுக்கு ஒருநாள் முன்பாக தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய விவகாரங்களை வெளியிட கூடாது என்பது விதிமுறை. அதன் அடிப்படையில் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் தேர்தல் ஆணையம் தரப்பில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினகரன் ஏன் வெளியிடவில்லை
இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஜெயலலிதா கொச்சைப்படுத்தப்படுவதால், இந்த வீடியோவை வெளியிட்டதாக வெற்றிவேல் பேட்டியில் குறிப்பிட்டார். ஆனால், ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி, சசிகலா மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தால், தினகரன்தான் அந்த வீடியோவை வெளியிட்டிருக்க வேண்டும்.

வெற்றிவேல் ஏன்
இவ்வளவு முக்கியமான வீடியோவை, தினகரன் வெளியிடாத நிலையில் வெற்றிவேல் ஏன் வெளியிட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்குதான் மேற்சொன்ன 'ப்ளான்' வேலை செய்துள்ளது. தினகரனின் சட்ட வல்லுநர் குழுவிற்கும் இந்த வீடியோ வெளியிட்டால் சிக்கல் வரும் என்பது தெரியும். அவர்கள் எச்சரிக்கையின்பேரில்தான் வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தினகரனுக்கு சிக்கல்
தேர்தல் ஆதாயத்திற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக கூறி தினகரனை தகுதி நீக்கம் செய்துவிட்டு தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுக்கும். அப்படி தேர்தல் ஆணையம் முடிவு செய்தால் இவ்வளவு நாள் தண்ணீராய் செலவு செய்த (தேர்தல் செலவீனம்) பணம் எல்லாம் வீணாக போய்விடும் என்பது அறியாத பாலகனா தினகரன்?

எப்படி ப்ளான்
ஈயம் பூசிய மாதிரியும் இருக்க வேண்டும், பூசாத மாதிரியும் இருக்க வேண்டும் என்ற கவுண்டர் மகான் வாக்கிற்கிணங்க, வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்பட வேண்டும், ஆனால் தனக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதில் தெளிவாக உள்ளார் தினகரன். விசாரணை என்று வந்தால் தப்பிக்கலாம் என்றுதான், இது தேர்தலுக்காக வெளியான வீடியோ இல்லை என திரும்ப திரும்ப பேட்டியில் கூறினார் வெற்றிவேல். ஆன்னா, ஊன்னா மீடியாக்களுக்கு பேட்டியளித்த தினகரன், இந்த வீடியோ பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை என்பதை கவனித்தால் இது புரியும். நீங்க நடத்துங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications