பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியது நியாயமானதல்ல உடனே திரும்ப பெற ஜெயலலிதா வலியுறுத்தல் !
சென்னை: பெட்ரோல்,டீசலுக்கான கலால் வரியை உயர்த்தும் நடவடிக்கை நியாயமானதல்ல வரி உயர்வை உடனே மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எண்ணெய் நிறுவனங்கள் 15.1.2016 முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 32 காசுகள் வீதமும், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 89 காசுகள் வீதமும் குறைத்துள்ளன. உலகச் சந்தையில் தற்போது நிலவும் பெட்ரோலியப் பொருட்களின் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை குறைக்கவில்லை. பெயரளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து விட்டு, உடனே மத்திய அரசு பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 75 காசுகள் வீதமும், டீசலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வீதமும் உயர்த்தி உள்ளது.

இதே போன்று தான் கடந்த 1.1.2016 அன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை பெயரளவுக்கு குறைத்து விட்டு கலால் வரியை உடனே மத்திய அரசு உயர்த்தியது. இது போன்று மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்தும் நடவடிக்கை நியாயமானதல்ல. எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இது வரை பெட்ரோலுக்கான கலால் வரியை 10 ரூபாய் 77 காசு என்ற அளவிலும், டீசலுக்கான கலால் வரியை 12 ரூபாய் 7 காசு என்ற அளவிலும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலை தற்போது குறைந்துள்ள நிலையில், அந்த விலைக் குறைவின் பயன் பொதுமக்களுக்கு சென்றடையவில்லை. எனவே தான், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை இன்னமும் மிக அதிக அளவில் உள்ளது.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014 நவம்பர் முதல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்தாமல் இருந்திருந்தாலே இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 10 ரூபாய் மற்றும் 12 ரூபாய் அளவிற்கு குறைந்திருக்கும்.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல் மற்றும் டீசல் நிர்ணயக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நான் பல முறை தெரிவித்துள்ளேன். அவ்வாறு மாற்றியமைப்பதன் மூலம், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்னமும் குறைக்கப்பட ஏதுவாகும். மத்திய அரசு கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் மீது 10 ரூபாய் 77 காசு அளவிற்கும், டீசல் மீது 12 ரூபாய் 7 காசு அளவிற்கும் உயர்த்தி விதிக்கப்பட்ட கலால் வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications