ஜெ. உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடம்.. அப்போலோ அதிர்ச்சி அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் இருந்து அவரது உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவ குழுவின் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதியில் இருந்து நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணம் அடைந்துவிட்ட நிலையில், நேற்று மாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நலம் பின்னடைவைக் கண்டது. இதனையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஆலோசனையின்படி தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், டெல்லியில் இருந்து 4 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். கவலைப்படும்படி ஒன்றும் இல்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அப்போலோ மருத்துவமனை ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து 13வதாக ஓர் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கை, ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்றும், அவர் தொடர்ந்து மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எக்மோ என்று சொல்லக் கூடிய செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுவரை, அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ள எந்த ஒரு மருத்துவ அறிக்கையிலும் "வெரி கிரிட்டிக்கல்" என்ற சொல் இல்லை. ஆனால் முதன் முறையாக தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் "வெரி கிரிட்டிக்கல்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே கவலை அதிகரிக்கச் செய்துள்ளனது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications