முத்தரையர் விவகாரம்... அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 'கல்தா'? ஸ்ரீரங்கம் வளர்மதி அமைச்சராகிறார்?
சென்னை: அ.தி.மு.க. மீதான முத்தரையர்களின் அதிருப்தியை சமாளிக்கும் வகையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. வளர்மதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகவும் போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த புதுக்கோட்டை கறம்பக்குடி ஒன்றிய தலைவரான கெங்கையம்மாள், அவரது கணவரும் கருப்பட்டிப்பட்டி ஊராட்சி தலைவருமான சொக்கலிங்கம் உள்ளிட்டோர் விராலிமலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டுக்கு கடந்த மாதம் சென்றுள்ளனர். அப்போது தங்கள் பகுதியில் தாய்சேய் நல விடுதி அமைக்க விஜயபாஸ்கரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதை நிராகரித்த விஜயபாஸ்கர், கெங்கையம்மாளின் ஜாதி பெயர் சொல்லி விஜயபாஸ்கர் கேவலமாகத் திட்டியதாக முத்தரையர் சமூகத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி போராட்டமும் நடத்தினர்.
ஆனால் அ.தி.மு.க. மேலிடமோ கெங்கையம்மாள், அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகியோரை கட்சியைவிட்டே நீக்கியது. இது முத்தரையர் சமூகத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் உள்ள 5 லட்சம் முத்தரையர்களும் தங்களது உறுப்பினர் அட்டையை தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கப் போவதாகவும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிப்போம் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

விஜயபாஸ்கருக்கு கல்தா
இது அ.தி.மு.க.வுக்கு பெரும் நெருக்கடியைத் தந்தது. தற்போது முத்தரையர் சமூகத்தினரை திருப்திபடுத்தும் வகையில் அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்கவும் முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கம் வளர்மதிக்கு வாய்ப்பு
அவருக்குப் பதிலாக முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. வளர்மதியை அமைச்சராக்கவும் ஜெயலலிதா திட்டமிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக நேற்று வளர்மதியை போயஸ் கார்டனில் வந்து சந்திக்க ஜெயலலிதா அனுமதி கொடுத்திருந்தார். ஆனால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. இன்று ஜெயலலிதாவை வளர்மதி சந்திக்க இருப்பதாக தெரிகிறது.

மேலும் 2 அமைச்சர்கள்?
இதேபோல் மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. கிட்டுசாமி, முன்னாள் அமைச்சர் விஜய் ஆகியோரையும் சந்திக்க ஜெயலலிதா அனுமதி கொடுத்துள்ளாராம்.
இதனால் தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் இருக்கலாம் என்றும் புதிய அமைச்சர்கள் பட்டியலில் டாக்டர் விஜய், ஸ்ரீரங்கம் வளர்மதி, மொடக்குறிச்சி கிட்டுசாமி ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

யார் அந்த 2 பேர்?
விஜயபாஸ்கருடன் நீக்கப்பட இருக்கும் வேறு 2 அமைச்சர்கள் யாராக இருக்கும் என்ற விவாதமும் தலைமை செயலக வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications