ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம் இம்முறையும் ஹெலிகாப்டரில்தான்! திருத்தணியா? ஸ்ரீவில்லிபுத்தூரா?
சென்னை: சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வரும் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தமிழகத்தின் வடமேற்கு திசையில் இருக்கும் திருத்தணி முருகன் கோவில் அல்லது, தென்மேற்கு திசையில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு, தேர்தல் பிரசாரத்தை துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறையும் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரச்சாரம் செய்ய உள்ள ஜெயலலிதாவிற்காக திருத்தணி, ஸ்ரீவில்லிபுத்தூரில் 'ஹெலிபேடு' அமைப்பதற்குரிய இடமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் தயாராகிவருகின்றன. விருப்பமனுக்கள் விறுவிறுப்பாக விற்பனை நடக்க, கூட்டணி பேரங்கள் மறைமுகமாக நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியை வீழ்த்த எதிர்கட்சியினரும், ஆட்சியை தக்கவைக்க ஆளுங்கட்சியினரும் வியூகம் வகுக்கத் தொடங்கியுள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்காக கடந்த ஆண்டிலிருந்தே திமுகவும், பாமகவும் தயாராகிவருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு, மண்டல மாநாடுகள், மக்களை சந்தித்து குறைகேட்பது என திமுகவும், பாமகவும் விறுவிறுப்பாக தங்களின் பணிகளை செய்து வருகின்றன. கூட்டணி முடிவாக நிலையிலும், தேர்தலை சந்திக்க வியூகங்களை வகுத்து வருகின்றன. திருப்புமுனை மாநாடுகளையும் அறிவித்து ஆங்காங்கே நடத்தி வருகின்றன.

அதிமுக தயார்
சட்டசபை தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியான அ.தி.மு.க. தயாராகி விட்டது. கடந்த லோக்சபா தேர்தலின் போது மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்குள் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்று அறிவித்ததுடன் வேட்பாளர்கள் பட்டியலையும் முன்கூட்டியே வெளியிட்டு பிரசாரத்தையும் தொடங்கினார். அதேபோல இந்த ஆண்டும் முன்னதாகவே வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல்களை முடித்து விட்டு மார்ச் 2வது வாரத்திலேயே பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் ஜெயலலிதா.

கடந்த கால வெற்றிகள்
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தேமுதிக உடன் கூட்டணி அமைத்த அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களில் வென்றது. அதிமுக கூட்டணிக்கு 203 இடங்கள் கிடைத்தன. திமுக எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. லோக் சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டது அதிமுக, தமிழகம்-புதுவையில் 40 தொகுதியிலும் 100 சதவீத வெற்றி என்ற முழக்கத்துடன் பிரசாரத்தை தொடங்கினார். எதிர்பார்த்தது போலவே 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

அதிமுக பிரச்சாரம் தொடக்கம்
சட்டசபை தேர்தல் பிரசாரத்தையும் அ.தி.மு.க. முன்கூட்டியே கடந்த 6ம் தேதியே தொடங்கிவிட்டது. இதற்கு சாதனை விளக்க லட்சிய பிரச்சார பேரணி என்று அ.தி.மு.க. பெயர் சூட்டி உள்ளது. முதல் கட்டமாக அ.தி.மு.க.வின் கிளை அமைப்பான ஜெயலலிதா பேரவை சார்பில் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வீடு வீடாக சென்று மக்களை சந்தியுங்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பிரச்சார வாகனங்கள்
அதிமுகவின் தேர்தல் பிரச்சார வாகனத்தை வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக பள்ளி கல்வி அமைச்சருமான வீரமணியிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே அளித்து மற்றொரு வகையில் பிரச்சாரத்தை தொடக்கி வைத்து விட்டார் ஜெயலலிதா. அதன்மூலமும் அரசின் சாதனைகளை ஊர் ஊராக சென்று பரப்பி வருகின்றனர்.

234 தொகுதிகளிம் வெற்றி
234 சட்டசபை தொகுதிகளிலும் 100 சதவீத வெற்றி என்பதே அ.தி.மு.க.வின் இலக்கு என அதன் நிர்வாகிகள் கூறி பிரசாரம் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டே வாக்குச்சாவடி வாரியாக அ.தி.மு.க.வின் பூத் ஏஜெண்டுகளை நியமித்து அவர்களுக்கு தேர்தல் பிரசாரம் குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டது. அனைவரும் சுறுசுறுக்காக களமிறங்கிவிட்டனர்.

சிறப்பு பூஜைகள்
முதல்வர் ஜெயலலிதாவின், 68வது பிறந்த நாள், வரும் 24ம் தேதி வருகிறது. இதையொட்டி, கடந்த ஜனவரி 20ம் தேதி, ஜோதிடர் அறிவுரையின் படி, தமிழகம் முழுவதுமுள்ள, 68 கோவில்களில் அறநிலையத் துறை சார்பில், முதல்வர் ஜெயலலிதாவுக்காக, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.அன்றைய தினம், கட்சியினர் 20 பேரை மட்டும் போயஸ் தோட்டம் அழைத்த ஜெயலலிதா, தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெற்றார். அதன் தொடர்ச்சியாக, கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பத்து நாட்களுக்கும் மேலாக பெறப்பட்டு வருகின்றன.

ஆண்டாள் கோவிலில் சசிகலா
ஜெயலலிதா 6வது முறையாக முதல்வராகவேண்டும் என்ற அவரது, தோழி சகிகலா கோவில் கோவிலாக சென்று பூஜை செய்து வருகிறார். 20ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் தங்க விமானம் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற சசிகலா, 25 ஆயிரம் பெண்களுக்கு ஜாக்கெட், குங்குமச் சிமிழ் உட்பட, ஒன்பது வகை பிரசாதங்கள் உடைய பைகளை, ஆண்டாள் சிலை காலில் வைத்து வணங்கி வழங்கியுள்ளார். ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட புனித நீர் மற்றும் பிரசாதங்களை ஜெயலலிதாவிடம் வழங்கினார்.

விஷ்ணு பக்தை
முதல்வர் ஜெயலலிதா தீவிர விஷ்ணு பக்தை. கடந்த 2011 சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை மதுரை அழகர் கோவில் சாலையில் மார்ச் 18ம் தேதி தொடங்கினார். ஸ்ரீ ரங்கத்தில் போட்டியிட்டார். மாநிலம் முழுவதும் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரச்சாரம் செய்தார். அதேபோல இந்த ஆண்டும் விரைவாக வேட்பாளர்கள் தேர்வை முடித்து அறிவித்து விட்டு ஹெலிகாப்டரில் பிரச்சாரத்தை ஜெயலலிதா தொடங்க இருப்பதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரச்சாரம் தொடங்குவது எங்கே
இந்நிலையில், மார்ச் மாதம், தமிழகத்தின் வடமேற்கு திசையில் இருக்கும் திருத்தணி முருகன் கோவில் அல்லது, தென்மேற்கு திசையில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு, தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஜெயலலிதா துவங்க திட்டமிட்டுள்ளார். அதற்காக, அவ்விரு இடங்களிலும், 'ஹெலிபேடு' அமைப்பதற்குரிய இடமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications