Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்கள் முதல்வருக்கு ஆதரவானவர்கள் அல்ல.. ஆனால் அதே சமயம்....- திவாகரன் மகன் ஜெயானந்த்

நாங்கள் முதல்வருக்கு ஆதரவானவர்கள் அல்ல என்று திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்கள் முதல்வருக்கு ஆதரவானவர்கள் அல்ல என்றும் சசிகலாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற எடப்பாடி ஆட்சிக்கு தொல்லை கொடுக்க மாட்டோம் என்றும் ஜெயானந்த் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த நிலையில் தற்போது தினகரனும், திவாகரனும் தனித்தனியாக கட்சியை ஆரம்பித்து விட்டனர். முதலில் தினகரனின் வளர்ச்சியை பார்த்து தாய்மாமன் என்ற முறையில் மகிழ்ச்சி அடைவதாக திவாகரன் பூரிப்படைந்தார்.

இந்நிலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸை விட பெரிய துரோகி தினகரன்தான் என்று திவாகரன் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திவாகரனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. அவர் சொல்லுவதையெல்லாம் பெரிதுப்படுத்த வேண்டாம் என்று தினகரன் வசை பாடினார்.

அதிமுக மீட்பு

அதிமுக மீட்பு

இந்நிலையில் தினகரனின் மேலூர் பொதுக் கூட்டத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த திவாகரன் மகன் ஜெயானந்த் சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுகவை மீட்டுவிடுவேன் என்றஉ டிடிவி தினகரன் கூறுவது முட்டாள்தனம்.

தினகரன் தவறிவிட்டார்

தினகரன் தவறிவிட்டார்

யார் காணாமல் போவார்கள் என்பதை காலம் முடிவு செய்யும். சிறைக்கு செல்லும் முன் அதிமுகவை டிடிவி கையில் கொடுத்து சென்றார் சசிகலா. அவர் கொடுத்த அதிமுகவை காப்பாற்ற தினகரன் தவறிவிட்டார். முதல்வருக்கு நாங்கள் ஆதரவானவர்கள் அல்ல. அதே சமயம் எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கெடுக்கக் கூடாது என்று சசிகலா எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்.

சக மனிதனுக்கு மரியாதை இல்லை

சக மனிதனுக்கு மரியாதை இல்லை

நடிப்பின் மூலம் நல்ல தலைவர் என்ற பெயரை டிடிவி தினகரன் எடுத்துள்ளார். தாங்கள் அனுப்பி வைத்தவர்களை மீண்டும் அழைக்க விருப்பம் இல்லை. தினகரன் ஆதரவாளர்கள் தானாகவே எங்கள் பக்கம் வருவர். சக மனிதனுக்கு தரவேண்டிய மரியாதை டிடிவி தினகரன் அணியிடம் இல்லை.

பிரிவை ஏற்படுத்திய தினகரன்

பிரிவை ஏற்படுத்திய தினகரன்

நாங்கள் ஒற்றுமையாகவே இருந்தோம்; தினகரன் தரப்பினர்தான் பிரிவை ஏற்படுத்தினர். தங்கள் அணிக்கு விரைவில் பலர் வருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. தினகரன் சொல்வதை வெற்றிவேல் செய்கிறார். எடப்பாடி தலைமையிலான ஆட்சி குறைபாடுகள் உள்ள ஆட்சிதான். எடப்பாடி அரசு குறைபாடு அல்ல ஆட்சிதான் என்றார் ஜெயானந்த்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+