சசிகலா வீடியோ கிராபிக்ஸ் அல்ல... அவர் ஷாப்பிங் போகவில்லை - ஜெயானந்த்
சசிகலா சிறையில் இருந்து வெளியே செல்லவில்லை. பார்வையாளர்களை பார்க்க சென்றிருக்கலாம் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே ஷாப்பிங் சென்று வரவில்லை. சிறைக்குள்ளேயே பார்வையாளர்களை சென்று பார்த்து விட்டு வந்திருக்கலாம் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா,அங்கு மற்ற கைதிகளைப் போல இல்லாமல் சொகுசாக இருந்ததற்கான புதிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன.

சசிகலா, வெளியே சென்றுவிட்டு மெயின் கேட் வழியாக மீண்டும் சிறைக்கு திரும்பும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆதாரங்களையும் சேர்த்து, மொத்தம் 74 ஆதாரங்களை கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சில புகைப்படம், வீடியோ ஆதாரங்களை, அவர் விசாரணை அதிகாரியிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அதிகாரி ரூபா கூறும்போது, "ஆண் காவலர்கள் பெண்கள் சிறை வளாகத்துக்குள் செல்ல அனுமதியில்லை. அவர்கள் பெண்கள் சிறையின் வெளியில் பிரதான வாயிலில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். எங்கிருந்து சசிகலா வந்தார். அவரை யார் அனுமதித்தார்கள் என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்று ரூபா கூறியுள்ளார்.
ரூபா கொடுத்துள்ள வீடியோ ஆதாரங்களில், சாதாரண உடையில் சசிகலா, இளவரசி சிறையைவிட்டு வெளியே சென்று, கைப்பையோடு திரும்பும் காட்சிகள் இருப்பதால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு வலுவாக மாறியுள்ளது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சசிகலா சுடிதார் அணிந்து கொண்டு கையில் பையுடன் திரும்பும் வீடியோ காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டவையாக இருக்கும் என்று டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் கூறி வந்தனர். இதனிடையே இப்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ காட்சி உண்மையானவைதான் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.
சிறைக்குள் இருந்து சசிகலா வெளியே சென்று வர வாய்ப்பேயில்லை என்றும், அவர் சிறைக்குள்ளேயே பார்வையாளர்களை சந்திக்க சென்ற போது பதிவான காட்சிகளாக இருக்கலாம் என்றும் ஜெயானந்த் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.
பாதுகாப்பு நிறைந்த சிறை வளாகத்திற்குள் இருந்து இருவர் மட்டுமே எப்படி வெளியே சென்று விட்டு வர முடியும் என்றும் ஜெயானந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications