ஜெ.விடுதலை: காலையில இருந்து சூரியனை காணலையே! வலைஞர்களும் வம்பு ட்விட்டுகளும்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
லட்டு கொடுத்தால் ராசியில்லை என்று நினைத்தோ என்னவோ, ஜெயலலிதா விடுதலையை ஜிலேபி, மைசூர்பாக் கொடுத்து கொண்டாடி வருகின்றனர் அதிமுகவினர்.
சின்ன செய்தி கிடைத்தாலே ட்விட்டரில் அடித்து ஆடுவார்கள் வலைஞர்கள். ஜெயலலிதா விடுதலை என்ற ‘வரலாற்று சிறப்பு' மிக்க செய்தி கிடைத்தால் விடுவார்களா? கருத்து கந்தசாமிகள் வழக்கம்போல வம்பாகவும், கிண்டலாகவும், தீர்ப்பை விமர்சனம் செய்தும் பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டர் பக்கம் போகமுடியாதவர்கள் இதை படியுங்களேன்.
|
அதிமுக நிலைப்பாடு என்ன?
இப்போது ஜெயலலிதா விடுதலையாகி விட்டதால், ஜிஎஸ்டி சட்ட மசோதாவை அது ராஜ்யசபாவில் ஆதரிக்குமா. அதேபோல நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு லோக்சபாவில் ஆதரவு தருமா என்று பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் டிவிட்டர்செய்தி மூலம் கேட்டுள்ளார்.
|
ரூ.66 கோடி சொத்துக்கு என்ன கணக்கு
இதேபோல ராஜ்தீப் சர்தேசாய் வெளியிட்ட இன்னொரு டிவிட்டில், அப்படியானால் ரூ. 66.65 கோடி சொத்துக்களுக்கு கணக்கோ, வருமான வரிக் கணக்கோ காட்டத் தேவையில்லை.. அப்படித்தானே என்று கேட்டுள்ளார்.
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஜெயலலிதா விடுதலையை கொண்டாடும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது. அம்மா மீண்டும் வருவதால் தமிழகம் பாதுகாப்பாகவும், மக்கள் பயமின்றியும் இருப்பார்கள என்று தெரிவித்துள்ளது. ( அப்போ ஓ.பி.எஸ் ஆட்சியில மக்கள் பயந்து கிடந்தாங்களோ?)
|
சூரியன் எங்கேப்பா?
அம்மா விடுதலை காலையிலிருந்து "சூரியனை"காணல இயற்கை எதையோ சொல்ல வருதோ
|
என்னா கொண்டாட்டம்
நாடு விடுதலை அடைஞ்சப்ப கூட இப்படி சந்தோசப்பட்டுருக்க மாட்டாங்க. அம்மா விடுதலையை இப்படி கொண்டாடுறாங்களே என்று கேட்டுள்ளார் ஒரு பதிவர்.
|
பங்குச்சந்தை கிடுகிடு
அம்மா விடுதலை .. பங்குசந்தை கிடு கிடு என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். அதுசரி ஜெயலலிதாவுக்கும் பங்குச்சந்தைக்கும் என்ன சம்பந்தம்னு தெரியலையே
|
யாரும் சாகக்கூடாது
தமிழ்நாட்டுல இன்னிக்கு யாரும் சகாக் கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணத்துல கூட விடுதலை பண்ணியிருக்கலாம் ஜட்ஜய்யா.
|
டாஸ்மாக் விற்பனை அமோகம்
ஜெயலலிதா விடுதலை: அதிமுகவினர் கொண்டாட்டம் - டாஸ்மாக் விற்பனை 100 கோடியை தாண்டியது என்று பதிவிட்டுள்ளார் ஒரு குடிமகன். ஜெயலலிதா விடுதலை...#இது நல்லதுக்கா கெட்டதுக்கானே தெரிலயே என்று பதிவிட்டுள்ளனர்.
|
அம்மா தினம்
ஜெயலலிதா குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அதிமுக வினர் அம்மாதினத்தைக் கொண்டாடி வருகின்றனர் என்று பதிவிட்டுள்ளனர்.
|
கேப்டன் ரியாக்சன்
தீர்ப்பை கேட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்காடு போட்டு அமர்ந்திருப்பது போல படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். கருத்து சொல்வதை விட இந்த படம் ஆயிரம் கதை சொல்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications