ஜெ. ஆசியுடன் நடக்கும் இளவரசி மகன் 'ஜாஸ்' விவேக் திருமண அழைப்பிதழ் இதுதான்!
சென்னை: சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகனும் 'ஜாஸ் சினிமாஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான விவேக் ஜெயராமனின் திருமணம் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் நாளை மறுதினம் 29ம் தேதி திங்கட்கிழமையன்று சென்னை வானகரத்தில் நடக்கிறது. இதற்கான திருமண அழைப்பிதழ் எளிமையான முறையில் அச்சிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகர் பாஸ்கர் - ஜெயா தம்பதியினரின் மகளும் மருத்துவக் கல்லூரி மாணவியுமான கீர்த்தனாவை அவர் மணக்கிறார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளமாட்டார் என்பது தெளிவாக தெரிந்து விட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் நல் ஆசியுடன் என்று திருமண அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது.
மதுரைவீரன் துணை, மீனாட்சி துணை என்று தொடங்கியுள்ள இந்த திருமண பத்திரிக்கையில் டி.வி. சுந்தரவதனம், சந்தானலட்சுமி சுந்தரவதனம் என்ற பெயரும் அதற்கு கீழே இளவரசி ஜெயராமன் என்று மாப்பிள்ளையின் அம்மா பெயர் இடம் பெற்றுள்ளது.
சசிகலாவின் அண்ணன் வி.திவாகரன் ஏற்பாடு செய்த திருமணம் என்பதால் அவருடைய பெயர் முதன்மையானதாக உள்ளது. மன்னார்குடி சொந்தங்களின் பெயர்கள் வரிசையாக இடம் பெற்றுள்ளன. இளவரசியின் மகள் மருமகன் பெயரும் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து செப் டம்பர் 2ம் தேதி தஞ்சாவூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று அச்சிடப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications