Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமா பாணியில் பெண்ணின் சடலத்தின் மீது விழுந்து கதறி அழுது 20 பவுன் நகை அபேஸ்.. வேலூரில் கொடுமை!

வேலூரில் இறந்த பெண���ணின் சடலத்தின் மீது விழுந்து அழுது 20 பவுன் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: இறந்த பெண்ணின் சடலத்தின் மீது விழுந்து அழுது 20 பவுன் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சினிமா பாணியில் நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. திருட்டு, கொலை, பலாத்காரம், ராகிங், ஏமாற்றுதல் என அனைத்து சம்பவங்களிலும் திரைப்படத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

இ்நிலையில் சினிமா பாணியில் பிணத்திற்கு போடப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாரப்படைப்பால்

மாரப்படைப்பால்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் வசந்தா. இவர் திடீரென மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார்.

சடலத்திற்கு அணிவித்த நகை

சடலத்திற்கு அணிவித்த நகை

இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவர் ஆசைப்பட்டு வாங்கி வைத்திருந்த 20 பவுன் தங்க சங்கிலியை வசந்தாவின் உடலுக்கு அணிவித்து இருந்தனர். கடைசியாக அவர் அணிந்து இருக்கட்டும் என குடும்பத்தினர் வேதனையுடன் அந்த சங்கிலியை அவருக்கு அணிவித்திருந்தனர்.

ஒப்பாரி வைத்த பெண்கள்

ஒப்பாரி வைத்த பெண்கள்

இதைத்தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது இழவுக்கு வந்த உறவுக்கார பெண்கள் வசந்தாவின் சடலத்தின் மீது விழுந்து கதறி அழுது ஒப்பாரி வைத்தனர்.

நகை அபேஸ்

நகை அபேஸ்

அப்போது சடலத்தின் மீது கதறி அழுத உறவுக்கார பெண் யாரோ ஒருவர் வசந்தாவுக்கு அணிவித்திருந்த 20 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுவிட்டார். ஏற்கனவே வசந்த இறந்த துக்கத்தில் இருந்த குடும்பத்தினர் அவரது சடலத்திற்கு அணிவித்த தங்க சங்கிலியை உறவினர்கள் திருடிச் சென்றதை அறிந்து வேதனையில் மூழ்கியுள்ளனர்.

சினிமா பாணியில் திருட்டு

சினிமா பாணியில் திருட்டு

இதுகுறித்து வசந்தா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகையை அபேஸ் செய்த உறவுக்கார பெண்ணை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தை பார்க்கும் சினிமா காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+