வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது சட்டவிரோதமானது: இராச்குமார்
சென்னை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது சட்டவிரோதமானது என தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர் இராச்குமார் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
எந்த வித அத்தியாவசிய சேவைகளுக்கும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில் இப்போது தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன்படி இனிவரும் தேர்தல்களில் ஆதார் எண் இல்லாதவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்ற நிலை ஏற்படும். மேலும் 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் கைரேகையை பதிவு செய்தே தேர்தலில் வாக்களிக்கும் நிலையை உருவாக்குவோம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது அடிப்படை மக்களாட்சி உரிமைக்கு எதிரானது. தனிமனித அடையாளங்களை எந்த தவறும் செய்யாத பொதுமக்கள் யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுடைய கை ரேகை, கண் ரேகை, முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி யாவும் இனி எளிதில் பெருநிருவனங்களுக்கு சென்று சேரும். இதனால் தனிமனித சுதந்திரம் என்பது முற்றிலும் பறிக்கப்படும் நிலை உருவாகும்.
ஆதார் எண்ணை எந்த ஒரு சேவைக்கும் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பு இருக்கும் போது தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது சட்ட விரோத நடவடிக்கையாகும். ஒரே ஒரு அடையாள அட்டை இருந்தாலும் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு மறுக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் மக்கள் விரோத நடவடிக்கையை நாம் எதிர்க்க வேண்டும். தமிழக அரசியல் கட்சிகள் உடனடியாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தல் வேண்டும். சமூக ஆர்வலர்கள் பொதுநல வழக்கு உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு முழு ஒத்துழைப்பை நல்க நாங்கள் அணியமாக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications