தொண்டர்கள் ஏற்கும் விதமாக அதிமுக பொதுச் செயலாளரை அறிவிக்க வேண்டும்: நடிகை லதா
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுச்செயலாளரை அ.தி.மு.க.வுக்கு முக்கிய பொறுப்பாளர்கள் நியமிக்கவேண்டும் என்று நடிகை லதா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் ஏற்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளரை அறிவிக்க வேண்டும் என நடிகை லதா கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகை லதா வெளியிட்டுள்ள அறிக்கையில்' 'என் குரு, என் ஆசான் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் உருவாக்கிய மாபெரும் மக்கள் சக்தி இயக்கமான அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், நான் ஏற்கனவே அறிக்கையில் குறிப்பிட்டதைப்போன்று இதுவரையில் யாரும் முக்கிய முடிவினை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. மொத்தத்தில் பெரிய குழப்பங்கள் கட்சியில் இன்னும் நீடிப்பதாகவே நான் உணருகிறேன். இது கட்சிக்கும், ஆட்சிக்கும் உகந்தது அல்ல.

அ.தி.மு.க.வை 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். தோற்றுவித்து அதனை வெற்றிக்கரமாக நடத்தியபோது அவருக்கு அடிப்படையாக அமைந்தது மக்கள் செல்வாக்கு. அவர்வழி வந்த ஜெயலலிதாவுக்கும் மக்கள் தங்களது வரவேற்பினை தந்தனர். தமிழக வரலாற்றில் தொடர்ந்து 2 முறை ஆட்சிப்பொறுப்பினை ஏற்ற 2 முதல்-அமைச்சர்களை பெற்ற கட்சி நம் அ.தி.மு.க. என்ற சாதனையை நாம் பெற வைத்ததும் அந்த மக்கள் சக்தி தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
எனவே என்னுடைய அபிப்பிராயம், என் குரு எம்.ஜி.ஆர். கூறியது போல 'மக்கள் தீர்ப்பே-மகேசன் தீர்ப்பு' என்பதன் அடிப்படையில் முக்கிய முடிவினை எடுக்கும் காலக்கட்டம் இது. இனியும் காலதாமதம் செய்யாமல் அடிமட்டத் தொண்டர்களில் இருந்து பொதுமக்கள் வரை அனைவரும் ஏற்கும் விதமாக பொதுச்செயலாளரை முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
அதேசமயத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் எம்.ஜி.ஆர். வழிகாட்டிய மக்கள் சேவையையும், ஜெயலலிதா செயலாற்றிய ஆட்சி முறையும் சேர்ந்து ஒருங்கே அமையும்படி, மக்களுக்கு பணியாற்றுவேன் என உறுதிமொழி தந்து பொதுச்செயலாளர் பதவியை பொது அறிக்கையின் வாயிலாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications