ஜோதிமணிக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் அருவெறுப்பு அரசியல்.. தலையிடுவாரா தமிழிசை?
சென்னை: இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் ஜோதிமணி, பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோருக்கு பேஸ்புக்கில் விடுத்த கோரிக்கை தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது அந்த போஸ்டை அவர் எடுத்துவிட்டாலும் கூட ஒரு பெண்ணாக அவர் பட்டபாடு அந்த போஸ்டில் வெட்ட வெளிச்சமாகியதை அதை படித்திருந்தோர் அறிவர்.
அத்தனையும் ஆபாச அர்ச்சனைகள். எழுத்தில் வடிக்க முடியத, ஒரு ஆபாச புத்தகத்தின் வரிகளை அப்பட்டமாக அவரது முகநூல் கமெண்ட் பகுதியிலும், வாட்ஸ்அப்பிலும் அனுப்பி வைத்துள்ளனர்.

தனிப்பிரிவு
இதுபோன்ற ஆபாச கமெண்ட் அனுப்பியது பாஜகவினர் என்கிறார் ஜோதிமணி. இதற்காகவே தகவல் தொடர்பு பிரிவு என்று ஒன்று இயங்குவதாகவும், சொல்லிக்கொடுத்து இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் தொடர்ச்சியான பல பதிவுகளில் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

அமீர்கான்
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என பாலிவுட் நடிகர், அமீர்கான் பேட்டியளித்த பிறகு சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக எழுத்த கடுமையான விமர்சனங்கள், செயற்கையாக பாஜக தகவல் தொழில்நுட்ப, தகவல் தொடர்பு துறையால் ஏற்படுத்தப்பட்டவை என்பது சமீபத்தில் அம்பலமானது.

மோடிக்கு எதிராக காட்டம்
இதுதொடர்பான செய்திகளையும் ஜோதிமணி ஷேர் செய்துள்ளார். 50 நாட்களில் பணப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக பிரதமர் மோடி அறிவித்ததை குறிப்பிட்டு, "ஒரு பிரதமர் தூக்கில் தொங்குவதும் ,உயிரோடு எரிக்கப்படுவதும் நாட்டுக்கு அவமானம்.சட்டப்படி குற்றம். மானஸ்தன் வேறு ! ராஜினமா செய்யட்டும்" என ஜோதி மணி தனது பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துதான் இந்த ஆபாச அர்ச்சனைகளுக்கு ஆரம்பம் என்கிறார்கள்.

கருத்தால் பதில்
எதுவாக இருந்தாலும் கருத்து சுதந்திரம் கொண்ட ஒரு நாட்டில், கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். பிரதமர் குறித்து ஜோதிமணி கூறியது கோபத்தை தூண்டும் கருத்தாக இருந்தால் அதே அளவு நாகரீகமாக பதிலடி கொடுத்திருக்கலாம். ஆனால் வழக்கம்போல பெண்ணை பாலியல் சொற்களை வீசி முடக்கிவிடலாம் என்ற எண்ணம்தான் பின்னூட்டம் கொடுத்தவர்கள் நோக்கமாக இருந்தது.

பெண்களுக்கு எதிராக
பெண் என்பதாலேயே பாலியல் ரீதியான கமெண்ட்டுகள் வந்துள்ளதாக ஜோதிமணி குற்றம்சாட்டுகிறார். அவர் கூறுவதிலும் நியாயம் உள்ளது. ஆண் அரசியல்வாதி இதுபோல மோடிக்கு எதிராக கமெண்ட் செய்திருந்தால் அப்போதும் கூட ஆண் என்பதால் அவர் தப்பிவிடுவார். அப்போதும் அவரின் குடும்பத்து பெண்களை ஆபாச அர்ச்சனை செய்திருப்பர். இதுதான் வழக்கமாக சமூக வலைத்தளங்களில் நடக்கிறது.

தலையிடுவாரா?
இந்த அநியாயங்களுக்கு உச்சமாக, ஜோதிமணியை போனில் தொடர்பு கொண்டும் ஆபாசமாக திட்டுவதாக அவர் தனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த கொடுமைகளை நிறுத்த, உடனடியாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலையிட வேண்டும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்து. அவரும் ஒரு பெண் என்ற அடிப்படையில் இதுபோன்ற மோசமான கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆரோக்கிய அரசியலுக்கு அடிகோல வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications