"மோடி, அமித்ஷா அழுத்தத்துக்கு பணிந்து மக்கள் தீர்ப்பை ஆளுநர் மாற்ற நினைப்பது தவறு" - ஜோதிமணி
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்றும், மோடி - அமித்ஷா அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவது மிகப்பெரிய தவறு என்றும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியை அமைக்க மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது.

இந்த சூழலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்குவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் தவெக அணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா 2 உறுப்பினர்கள் உள்ளதால், அவர்களின் முடிவு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதற்காக தவெக சார்பில் அந்த கட்சிகளிடம் அதிகாரப்பூர்வமாக ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைக்காமல் உள்ளார். இதற்கு திமக, அதிமுக, சிபிஎம் என பல்வேறு கட்சியினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்றும், மோடி - அமித்ஷா அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவது மிகப்பெரிய தவறு என்றும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து எம்பி ஜோதிமணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: ஆளுநர் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால்_ 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜகவை, மாண்புமிகு ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க முடியுமா?
திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு வரம்பற்ற அதிகாரம் எதுவும் கிடையாது. அவர் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளது.
த.வெ.க வின் தலைவர் திரு.விஜய் அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். அவர் கூட்டணி என்று கடிதம் கொடுத்தாலும் , த.வெ.க தனிப்பெரும் கட்சி தான். தனிப்பெரும் கட்சியின் தலைவரை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரியானது. ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க முடியும். ஆதரவுக் கடிதம் தர வேண்டிய அவசியம் இல்லை.
மோடி, அமித்ஷா அழுத்தத்திற்குப் பணிந்து தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications