For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலிவான விளம்பரங்களைத் தேடும் விஜயதாரணி: காங். பிரமுகர் ஜோதிமணி பாய்ச்சல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மலிவான விளம்பரங்களுக்காக பெண்கள் தொடர்பான சட்டங்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கையிலெடுப்பதாக அக்கட்சியின் பிரமுகர் ஜோதிமணி சாடியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவனுக்கும் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் விஜயதாரணி எம்.எல்.ஏ. மலிவான விளம்பரங்களுக்காக இப்படி செய்வதாக காங்கிரஸ் பிரமுகர் கரூர் ஜோதிமணி சாடியுள்ளார்.

இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ளதாவது:

Jothimani Slams Vijayadharani

பெண்களின் கண்ணியத்தை உறுதிசெய்யும்,பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ,அவதூறுகளை தடுக்கும் சட்டங்கள் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே அமலுக்கு வந்துள்ளன.

இந்த சட்டங்கள் பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கு ஒரு ஆயுதமாக இல்லாவிட்டாலும் ஒரு ஊன்றுகோலாகவேனும் பயன்பட்டு வருகின்றன. இந்தச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவது பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி.

சொந்த அரசியல் லாபகங்களுக்கும் ,மலிவான பிரபல்யத்திற்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அதுவும் பெண்ணாக இருப்பவர் தவறாகப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது.

தமிழ்நாட்டில் போராடவேண்டிய ,தட்டிக்கேட்க வேண்டிய ,மக்களிடம் கருணையோடு காதுகொடுத்துக்கேட்க வேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.

அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மலிவான விளம்பரங்களை நோக்கி அரசியல்வாதிகள் பயணிப்பது நல்லதல்ல .

இவ்வாறு விஜயதாரணியை சாடியுள்ளார் ஜோதிமணி.

English summary
Congress leader Jothimani said that "Its unfortunate that A women MLA misusing an important law which protects millions of women from abuses and violence on Vijayadharani row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X