பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்... நடிகை மாயா மீது புகார்
சென்னை:சென்னையில் பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நடிகை மாயா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு ஆளான பத்திரிகையாளர் பெயர் மனோஹாரி என்பதாகும். இவர், ஜெயப்பிரியா முரசு என்ற பத்திரிகையில் சப் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.

சாலிகிராமத்தில் வசித்து வரும் மனோஹாரியின் வீட்டருகே நடிகை மாயா வசித்து வருகிறார். நேற்றைய தினம் பணி முடிந்து வீடு திரும்பிய மனோஹாரியின் வீட்டருகே மாயாவின் கார் நிறுத்தப்பட்டிருந்ததாம். தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு இடமில்லை என்று கூறியதற்கு நடிகை மாயா தரக்குறைவாக பேசினாராம்.
பேச்சுவார்த்தை முற்றவே மனோஹாரியை நடிகை மாயாவும் அவரது மகனும், மகளும் அடித்து காயப்படுத்தியுள்ளார். இதில் முகத்தில் காயமடைந்த மனோஹாரி நடந்த சம்பவம் பற்றி விருகம்பாக்கம் காவல்நிலையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

நடிகை மாயா தனது பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை போடுவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே இவர், தனது நடிகை சீதாவுடன் தகராறு செய்து அந்தப் பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications