அதிமுக எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்ட கூவத்தூரில் பத்திரிகையாளர்கள் திடீர் மறியலால் பரபரப்பு
அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட் முன்பாக பத்திரிகையாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட் முன்பாக பத்திரிகையாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் 90 பேர் கல்பாக்கம் அருகே கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக இந்த எம்.எல்.ஏக்களை சசிகலா நேரில் சந்தித்து தம்மை ஆதரிக்க கெஞ்சி வருகிறார், இந்த ரிசார்ட் பகுதிக்கு செல்ல பத்திரிகையாளர்கள், பொதுமக்களுக்கு மன்னார்குடி குண்டர்கள் தடை விதித்திருந்தனர். இந்த குண்டர்படைக்கு போலீஸும் ஆதரவாக இருந்து வருகிறது.
இதனிடையே இன்று மாலை பொதுமக்களும் செய்தியாளர்களும் எம்.எல்.ஏக்கள் சிறைவைக்கப்பட்ட கூவத்தூர் ரிசார்ட்டை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயற்சித்தனர். ஆனால் போலீசார் தடையை மீறி ரிசார்ட் அருகே பொதுமக்களும், செய்தியாளர்களும் சென்றனர்.
அங்கு செய்தியாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தங்களிடம் இருந்து மன்னார்குடி குண்டர்கள் பறித்த செல்போன்கள், கேமராக்களை திரும்ப பெற்றுத் தர வேண்டும்; ரிசார்ட்டுக்குள் செய்தியாளர்களை அனுமதிக்க வேண்டும் என கோரி மறியல் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கு அதிமுக நிர்வாகிகள் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சில பத்திரிகையாளர்களை மட்டும் ரிசார்ட்டுக்குள் அழைத்து சென்றது அதிமுக கோஷ்டி.
இந்த மறியலால் போலீசார் அங்கு பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களின் செல்போன், கேமராக்கள் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை செய்தியாளர்கள் கைவிட்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications