வைகோவுக்கு தூத்துக்குடி மா.செ. ஜோயல் போட்ட பணமாலை!
தூத்துக்குடி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள பணத்தை மாலையாக அணிவித்து அசத்தியுள்ளார் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல்.
மதிமுகவின் 23வது மாநில பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஜோயல் மிக பிரமாண்டமாக செய்திருந்தார். சாலைகளில், பேனர்கள், கட்அவுட்டுகள் என வைத்து அசத்தினார்.
கூட்டத்திற்கு வந்த வைகோவை அதிரவைக்கும் விதமாக ஜோயல், ஐந்து லட்சம் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டை மாலையாக செய்து அவருக்கு அணிவித்தார்.
ஜோயல் மீது வைகோவுக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. உடன்குடி அருகே உள்ள லெட்சுமிபுரத்தை சேர்ந்த ஜோயல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.
கடந்த 15 ஆண்டு காலமாக மாவட்ட செயலாளராக இருக்கும் இவர், தென் மாவட்டங்களில் கட்சியை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். வைகோ தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தால் அவருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து அசத்தும் ஜோயல் தற்போது, பண மாலையால் வைகோவை பிரமிக்க வைத்துள்ளார்.
இதுநாள்வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்தப்படம் கடந்த இருதினங்களாக இணையதளங்களில் உலாவருகிறது. இதுபோன்ற ஆடம்பர வரவேற்புகளுக்கு அனுமதிக்காக வைகோ, பணமாலையை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பதுதான் மதிமுக தொண்டர்களின் கேள்வியாகும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications