கண்கள் நெட்டுக்குத்தாகி ஆவென வாயைப் பொளந்து அழுத ஜூலி.. என்னாச்சு??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி திடீரென வயிறு வலி என அழுவது போன்ற புரமோ வெளியிடப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி படுகேவலமாக போயிக்குகொண்டிருக்கிறது. டிஆர்பிக்காக வேண்டி தினம்தோறும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஜூலி போடும் நாடகத்திற்கு அளவே இல்லை. அவரது நடிப்பது மக்களுக்கு நன்கு புரிந்து விட்டது என்பது சோஷியல் மீடியாக்களில் பகிரப்படும் தகவல்களிலேயே தெரிகிறது.

கதறும் ஜூலி

கதறும் ஜூலி

பிக்பாஸில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வாரா வாரம் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வரும் ஜூலி.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் சாதாரணமாக நடந்து வரும் ஜூலி டைனிங் டேபிள் அருகே அமர்ந்து திடீரென வயிற்றை பிடித்து கதறுகிறார்.

அலெக்காக தூக்கும் சினேகன்

அலெக்காக தூக்கும் சினேகன்

கண்களெல்லாம் சொருகி அலறும் ஜூலியை அலெக்காக தூக்குகிறார் சினேகன். அனைவரும் பதறியடித்து என்ன என ஓடுகின்றனர்.

டிராமா பண்ணுது கன்றாவி

டிராமா பண்ணுது கன்றாவி

நேற்றைய எபிசோடு வரை ஜூலியை தங்கை தங்கை எனக்கூறி ஓவியாவுக்கு எதிராக தூண்டி விட்ட காயத்ரி, ஜூலி அழுவதை பார்த்து சும்மா டிராமா பண்ணுது கன்றாவி என்கிறார்.

அழுவதுக்கூட டிராமாதான்

அழுவதுக்கூட டிராமாதான்

பொறுத்திருந்து பார்ப்போம் ஜூலிக்கு என்ன ஆனது என்று. காயத்ரி சொன்னது போலவே அவர் டிராமா செய்தாரா என்பது இன்று தெரியவரும். பிக்பாஸில் எல்லாமே நடிப்பாக உள்ளதால் ஜூலி அழுவதுக்கூட டிராமாதான் என இப்போதே கூறத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Julie crying in the biggboss program. But Gayathri says Julie plays drama. It shows in the promo.
Please Wait while comments are loading...