அவ எப்படி தூங்குறான்னு பார்த்துடுறேன்... ஓவியாவை மரண டார்ச்சர் செய்த அந்த 3 பேர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியாவை வெளியேற்ற துடிக்கும் ஜூலி, காயத்ரி, நமீதா உள்ளிட்டடோர் அவரை தூங்கவிடாமல் டார்ச்சர் செய்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனிதாபிமானம் கிலோ என்ன விலை என கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் கூத்துகள். பிக்பாஸ் குடும்பத்தில் உள்ளவர்களிலேயே மக்கள் மனதை வென்றவராக நடிகை ஓவியா உள்ளார்.

தனக்கு எதிரான நிகழ்வுகளையும் ஸ்போர்டிவ்வாக எடுத்துக்கொள்ளும் குணம், உதவும் மனப்பான்மை, மற்றவர்களை பற்றி குறை கூறாமல் இருப்பது, பிராக்கலாக இருப்பது என அவரது நடவடிக்கைகள் மக்கள் மனத்தில் அவருக்கென ஒரு ஸ்ட்ராங்கான இடத்தை பெற்றுவிட்டது.

ஓவியாவுக்கு எதிராக சதி

ஓவியாவுக்கு எதிராக சதி

இதனால் கடந்த 2 வாரங்களாக சக குடும்பத்தினரால் நாமினேட் செய்யப்பட்டும், அதிக வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டிலேயே நீடிக்கும் வாய்ப்பை பெற்றுவருகிறார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத காயத்ரி, ஜூலி, நமீதா ஆகியோர் அவரை எப்படியாவது வெளியேற்றிட வேண்டும் என மற்றவர்களையும் ஓவியாவுக்கு எதிராக தூண்டிவிட்டு வருகின்றனர்.

ஓவியாவுக்கு எதிராக சதி

ஓவியாவுக்கு எதிராக சதி

இதனால் கடந்த 2 வாரங்களாக சக குடும்பத்தினரால் நாமினேட் செய்யப்பட்டும், அதிக வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டிலேயே நீடிக்கும் வாய்ப்பை பெற்றுவருகிறார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத காயத்ரி, ஜூலி, நமீதா ஆகியோர் அவரை எப்படியாவது வெளியேற்றிட வேண்டும் என மற்றவர்களையும் ஓவியாவுக்கு எதிராக தூண்டிவிட்டு வருகின்றனர்.

விஷத்தை கக்கும் காயத்ரி

விஷத்தை கக்கும் காயத்ரி

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஓவியாவை தகாத வார்த்தைகளால் கடுமையாக பேசினார் காயத்ரி ரகுராம். மூஞ்சையும் மொகரகட்டையும் பார், நொம்மா, அரைமணி நேரம் கேமராவை நிறுத்தினால் போதும் அவளை என்ன செய்கிறேன் என்று பாருங்கள், என்ன ஜென்மமோ என காயத்ரி பேசும் ஒவ்வொரு பேச்சும் விஷமாக உள்ளது.

சீண்டும் காயத்ரி நமீதா

சீண்டும் காயத்ரி நமீதா

நள்ளிரவு 12 மணிக்கு மேல் நமீதாவும் காயத்ரியும் திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம் என பாடி ஓவியா சீண்டுகின்றனர். இதனால் கோபத்தில் ரூமிலிருந்து வெளியேறும் ஓவியா எதற்கும் ஒரு லிமிட் உள்ளது எனக்கூறி செல்கிறார்.

சீன்போடும் ஜூலி

சீன்போடும் ஜூலி

இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார் ஜூலி. அதற்கு நீ வாயமூடு என கூறி விட்டு செல்கிறார் ஓவியா. இதனால் வெளியே உட்கார்ந்து சீன் போடுகிறார் ஜூலி.

அவளை தூங்கவிடக்கூடாது..

அவளை தூங்கவிடக்கூடாது..

பின்னர் மீண்டும் ஓவியா அறைக்கு சென்று தூங்குவதை பார்த்த காயத்ரி, ஜூலி, நமீதா ஆகியோர் அவளை தூங்கவிடக் கூடாது எனக்கூறி தொடர்ந்து சத்தமாக பாட்டுப்பாடி வெறுப்பேற்றுகின்றனர். ஜூலி தனது பெட்டிலிருந்து காயத்ரியின் பெட்டிலேயே வந்து அமர்ந்து கொண்டு தாதாபோல் நடந்துக்கொள்கிறார். ரைசாவையும் அவர்கள் துணைக்கு அழைத்துக்கொண்டனர்.

தவறாக பேசும் ஜூலி

தவறாக பேசும் ஜூலி

இதையடுத்து மீண்டும் ரூமை விட்டுவெளியேறும் ஓவியா ஆண் போட்டியாளர்களின் அறையில் தூங்குகிறார். அதனையும் வாய்க்கூசாமல் தவறாக பேசுகிறார் ஜூலி. தூங்கவில்லையா எனக்கேட்கும் சக்தியிடம் அழுது கொண்டிருக்கும் ஜூலியை சமாதானப்படுத்துவதாக பொய் சொல்கிறார் காயத்ரி.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

நேற்று முன்தினம் வயிற்று வலியால் ஜூலி துடித்தபோது காயத்ரி, நமீதா, ரைசா ஆகியோர் அதனை நாடகம் என்றனர். ஆனால் ஓவியாதான் ஆதரவாக இருந்தார். அந்த நன்றிக்கூட இல்லாமல் ஜூலி ஓவியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். 3 பெண்கள் சேர்ந்து ஓவியாவை தூங்கவிடாமல் டார்ச்சர் செய்வது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Julie, Gayathri, Namitha are torturing oviya to do not sleep in the room. They all were targeting Oviya. Julie's behaving disgusting.
Please Wait while comments are loading...