"சின்னம்மா சின்னம்மா".. அட, ஜூலி பிரபலமடைந்த நாளப்பா இது.. பிளாஷ்பேக்!
சின்னம்மா சின்னம்மா என்ற கோஷத்தின் மூலம் பிக்பாஸ் ஜூலி பிரபலமடைந்த நாள் இன்றுதான்.
சென்னை: சின்னம்மா சின்னம்மா, ஓபிஎஸ் எங்கம்மா என்று வானை பிளந்து கோஷமிட்டு ஜூலி பிரபலமடைந்த நாள் இன்றுதான். இதுகுறித்த ஒரு பிளாஷ்பேக் இதோ...
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏர் தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து அந்த போட்டியை நடத்த தடை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு அவனியாபுரத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெரினாவில் போராட்டம்
இந்த பகுதி மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 100, 1000 கணக்கில் இருந்த கூட்டம் லட்சங்களாக மாறியது.

போராட்டம்
இந்த மெரினா போராட்டம் புரட்சியை ஏற்படுத்தியது என்று சொல்லும் அளவுக்கு மக்கள் அலைஅலையாக வண்டி வைத்துக் கொண்டு மெரினாவை அடைந்தனர். இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாவிட்டாலும் அதற்கு அசராமல் செல்போன் டார்ச்களை ஆன் செய்தது மின் மினி பூச்சு போல் இருந்தது.

கல்லூரி மாணவிகள் போராட்டம்
மெரினாவில் குரூப்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் குழுக்களாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் தங்களை கைக்குழந்தைகளுடன் வந்தனர். அப்போது அவ்வாறு குரூப்களாக போராட்டம் நடத்தியவர்களில் பிரபலமானவர் ஜூலி.

ஓபிஎஸ் எங்கம்மா
சின்னம்மா சின்னம்மா... ஓபிஎஸ் எங்கம்மா என்ற கோஷத்துடன் ஜூலி என்ற பெண் கோஷமிட, உடனிருந்த அவரது தோழிகளுக்கு பதில் கோஷம் இட்டனர். இது அனைவராலும் கவரப்பட்டது. இந்த கோஷம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
ஜல்லிக்கட்டு போராளி என்ற பெயரில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி தனது பெயரை கெடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பொய் கூறியே வந்ததால் அவரை ரசிகர்கள் ஏற்க மறுத்து பயங்கரமாக ஓட்டினர். தற்போது அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, விளம்பரப் படங்கள், டிவி தொகுப்பாளினி என்ற புதிய அவதாரங்களை எடுத்த ஜூலி தற்போது திரைப்படத்திலும் நடிக்கிறார். ரசிகர்களை வெறுப்பை சம்பாதித்த ஜூலி சின்னம்மா சின்னம்மா கோஷமிட்டு பிரபலமடைந்த நாள் இன்றுதான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications