நடத்தையில் சந்தேகம்... ‘மெட்ராஸ்’ பட நடிகை தீக்குளித்து தற்கொலை
சென்னை: வேலைக்கு செல்லாத கணவர் தொடர்ந்து தனது நடத்தையில் சந்தேகம் கொண்டு சண்டையிட்டு வந்ததால் மனமுடைந்த துணை நடிகை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை விநோபா நகரைச் சேர்ந்தவர் விக்டர்(42). இவரது மனைவி நீலாவதி (38). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதி 38வது வட்ட அதிமுக துணைச் செயலாளராக உள்ள நீலாவதி, துணை நடிகையும் ஆவார். இவர் மெட்ராஸ் உள்பட பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சினிமா மற்றும் அரசியலில் இருந்ததால் நீலாவதியின் நட்பு வட்டம் பெரிது எனக் கூறப்படுகிறது. இதனால் நீலாவதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு விக்டர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
அதோடு சரிவர வேலைக்குச் செல்லாமலும் விக்டர் இருந்துள்ளார். இதனை நீலாவதி தட்டிக் கேட்டுள்ளார். இதனாலும் அவர்களுக்குள் சண்டை நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது நீலாவதியை விக்டர் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நீலாவதி சோகமான மனநிலையில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீலாவதியில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக அங்கு அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications