சீனியர்களுக்கு உள்ள பொறுமை ஜுனியர் பன்னீர்செல்வத்துக்கு இல்லை- சசிகலா ஆதரவு எம்எல்ஏ செம்மலை
சீனியர்களுக்கு உள்ள பொறுமை ஜுனியர் பன்னீர்செல்வத்துக்கு இல்லை என சசிகலா ஆதரவு எம்எல்ஏவான செம்மலை தெரிவித்துள்ளார்.
சென்னை: சீனியர்களுக்கு உள்ள பொறுமை ஜுனியர் பன்னீர்செல்வத்துக்கு இல்லை என சசிகலா ஆதரவு எம்எல்ஏ செம்மலை கூறியுள்ளார்.எதிர்க்கட்சியினர் பன்னீர்செல்வத்தை கருவியாக பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏவான செம்மலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜெயலலிதாவிடம் அரசியல் பயின்றவர் சசிகலா. சசிகலாவால் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த முடியும்.

அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் திடீரென தடம்புரண்டுள்ளார். எதிர்க்கட்சியினர் அவரை கருவியாக பயன்படுத்துகின்றனர்.
ஜெயலலிதா கூறியதாலேயே ஜுனியரான அவரை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். சீனியர்களுக்கு உள்ள பொறுமை ஜுனியரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு இல்லை. அதனாலேயே அவர் சசிகலாவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.
ஆளுநர் நிச்சயம் சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பார் என நம்புகிறோம். இவ்வாறு சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏ செம்மலை கூறினார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications