'நான் ஏன் போக வேண்டும்' கேள்வி எழுப்பிய நீதிபதி கர்ணன்... உச்சநீதிமன்றத்தில் ஆஜர்
'நான் ஏன் போக வேண்டும்' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கர்ணன் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
சென்னை: உச்சநீதிமன்றம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிபதி கர்ணன் ஆஜரானார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கர்ணன். அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டார்.
இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக புகார் ஒன்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பினார்.

7 பேர் அமர்வு
அதைத் தொடர்ந்து, தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி கர்ணன் மீது உச்சநீதிமன்றம் பதிவு செய்தது. இந்த வழக்கை 7 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது.

விசாரணை
இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்பதால் நேரில் ஆஜராக நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. ஆனாலும் நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகவில்லை. மேலும் நான் ஆஜராக முடியாது என்றும் கூறி வந்தார்.

பிடிவாரண்ட்
இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக் கூடிய பிடி வாரண்ட்டை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன் என்றும் கர்ணன் கூறினார்.

ஆஜர்
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் உச்சநீதிமன்றம் கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியது.

தப்பியது
நீதிபதி கர்ணன் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானதால் அவரை கைதுசெய்யும் அவசியம் இல்லாமல் போனது. இனியும் தொடர்ந்து உச்ச நீதிமன்ற அமர்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு கர்ணன் செயல்படுவார் என்று வழக்கறிஞர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications