நீதிபதிகள் பதவிக்கான பரிந்துரை சரியில்லை... உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நீதிபதிகள் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் சரியானதாக இல்லை என்று நீதிபதி ஒருவரே புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிதரன், தனபால் அமர்விடம் நீதிபதி கர்ணன் இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார். நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் குறித்த விசாரணையில் கர்ணன் தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
மூத்த வழக்கறிஞர் காந்தி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது நீதிமன்றம் வந்த கர்ணன் விசாரணையில் திடீரென குறுக்கிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தலைமை நீதிபதி பரிந்துரைத்த 12 நீதிபதிகளின் பெயர் பட்டியல் சரியானது அல்ல என்று நீதிபதி கர்ணன் கூறினார். கர்ணன் குற்றச்சாட்டை கேட்ட 2 நீதிபதிகள் அமர்வு, மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.












Click it and Unblock the Notifications