அஞ்சலி செலுத்திய 76 வருட நட்பு.. கருணாநிதிக்காக கோபாலபுரத்தில் கண்ணீர் விடும் அன்பழகன்
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார். 95 வயதில் காலமானார் திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவர் இன்று மாலை 6.10 மணி இயற்கை எய்தியதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் கருணாநிதி , பொதுச்செயலாளர் அன்பழகன் 76 வருடமாக நெருங்கிய நபர்களாக இருந்தனர். இவர்களது நட்பு 1942ல் தொடங்கியது. இந்த நிலையில் தனது நண்பனை இழந்து இருக்கிறார் அன்பழகன்.
இருவருக்கும் வயது 90 தாண்டிவிட்டது. அன்பழகன் சில நாட்களுக்கு முன்புதான் கருணாநிதியை காவேரி மருத்துவமனையில் கைத்தாங்கலாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications