எப்படி இருக்கிறார் கே பாலச்சந்தர்?- ஒரு அப்டேட்
இயக்குநர் கே பாலச்சந்தர் உடல்நிலை குறித்து நேற்று முழுவதும் பல்வேறு செய்திகளும் வதந்திகளும் பரவி வந்த நிலையில், அவர் உடல்நிலையில் இன்று லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு இன்று செயற்கை சுவாசம் பொருத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இயக்குநர் கே பாலச்சந்தர். மாலையில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் நேரில் போய்ப் பார்த்தார். அவர் வந்திருப்பது தெரிந்ததும் கண் திறந்து பார்த்த பாலச்சந்தர், பின்னர் சிரித்ததாக ரஜினியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து போனில் பேசிய கமல் ஹாஸனுடன் சில வார்த்தைகள் அவர் பேசியதாக கமல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை அவர் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தன்னை வந்து பார்ப்பவர்களைக் கண் திறந்து பார்க்கும் பாலச்சந்தர், பேச முயல்வதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று அவர் சுவாசத்தைச் சீர்படுத்த செயற்கை சுவாசக் கருவி பொருத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications