ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி
சென்னை: எல்லோரும் நேசிக்கும் வண்ணம் ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர் ராம. நாராயணன் என்று தி.க. தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிரபல இயக்குநர், தயாரிப்பாளர், கதை, வசனகர்த்தா என்ற பெருமையைப் பெற்று, 25 ஆண்டு காலத்தில் 128 படங்களை உருவாக்கியவர் என்ற பெருமை பெற்றவர் ராம. நாராயணன் அவர்கள் என்பதைவிட, எல்லோரும் நேசிக்கும் வண்ணம் ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர் அவர்.
‘‘பெரியார்'' திரைப்படத்தினைத் தயாரித்து வெளிவருவதற்கு ஏராளமான பங்களிப்பை அவர் செய்ததை நாம் நன்றி உணர்வுடன் நினைவு கூர்கிறோம்.
இயல் - இசை - நாடக மன்றத்தின் தலைவராக அவரை, கலைஞர் முதல்வராக இருந்தபோது நியமித்தார்; அதில் முத்தமிழ் வளர்ச்சிக்கு அருமையாகப் பாடுபட்டார். சிறந்த மாமனிதர் அவர். பண்புடன் எவரிடமும் பழகும் மொழி, இன உணர்வாளர். இளைஞர்களைத் தட்டிக் கொடுத்து முன்னுக்கு வருவதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.
அவரது மறைவு (சிங்கப்பூர் மருத்துவமனையில், 65 ஆம் வயதில் ஏற்பட்டது) தமிழ்கூறும் நல்லுலகத்திற்கே பெரும் இழப்பாகும்.
அவரது இழப்பால் வாடிடும் அவரது குடும்பத்தினருக்கும், கலைக் குடும்பத்தவர்க்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications