ரஜினிகாந்தின் காலா கரிகாலன் படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்கியது... வைரலாகி வரும் படங்கள்
நடிகர் ரஜினிகாந்தின் காலா கரிகாலன் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது. ரஜினி நடித்த காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் காலா கரிகாலன் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது. அதில் ரஜினிக்கு பா.ரஞ்சித் காட்சிகளை விளக்குவது போன்றும் ரஜினிகாந்த் இடம்பெற்ற காட்சிகளும் வைரலாக பரவி வருகிறது.
ரஜினியின் 164-ஆவது படத்தின் பெயர் காலா கரிகாலன் என்று கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அன்று மாலையே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இதைத் தொடர்ந்து வழக்கம் போல் ரஜினி ரசிகர்கள் அந்த படங்களை ஸ்டிக்கர்களாக அச்சடித்து தங்கள் வாகனங்களில் ஒட்டி கொண்டு வலம் வருகின்றனர்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் மகிழ்ச்சியில் உள்ள ரசிகர்கள் புதிய படம் தொடக்கத்தால் மேலும் குஷியாகி உள்ளனர். இந்த படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித்தே , காலாவையும் இயக்குகிறார்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி காந்த் நேற்று சென்னையிலிருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றார். படப்பிடிப்புகள் இன்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபடி தொடங்கியது. அதில் ரஜினிக்கு ரஞ்சித் காட்சிகளை விளக்குவது போன்ற படமும், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் ரஜினியுடன் நடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவியுள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications