காலா.. விமர்சனங்கள் ஓகே... ஆனால் வசூல் தான் செம அடி .. விஷால் தரும் ஷாக்!
காலா படம் எதிர்பார்த்த அளவு முதல்நாள் வசூலைத் தரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு காலா படத்தின் முதல் நாள் கலெக்ஷன் மிக குறைவாக வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் ரிலீசுக்கு முன்பே சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டது.
ஆனால் படத்தின் முதல் நாள் வசூல் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என கூறப்படுகிறுது. பொதுவாக ரஜினி படங்கள் முதல் நாளிலேயே பல கோடி ரூபாய் கலெக்ஷன் அள்ளும். ஆனால் மிகந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியான காலா படத்துக்கு வசூல் குறைய காரணம் என்ன என்பது சரியாக தெரியவில்லை.
இந்நிலையில் படத்தின் முதல் நாள் நிலவரம் குறித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால் அளித்த பேட்டியில், முதல் நாள் கலெக்ஷன் குறைவாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்:

ரஜினி ரஜினி தான்:
தேவையில்லாமல் காலா படத்தை காவிரி விவகாரத்துடன் தொடர்ப்பு படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். இது படத்தின் முதல் நாளில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என தெரியவில்லை. ஆனால் இறுதியில் ரஜினி சார் ரஜினி சார் தான் என்பதை நான் தெரிந்துகொண்டேன்.

முதல் நாள் வசூல்:
அவரது எல்லா படங்களுக்கும் அபாரமான வரவேற்பு கிடைக்கும். காலாவின் முதல் நாள் வசூல் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்ய எனக்கு நேரம் கிடைக்கவில்லை.

ரசிகர்கள் ஏராளம்:
பா.ரஞ்சித்தின் முந்தைய படமான கபாலி, முதல் நாளில் அவ்வளவாக பாராட்டப்படவில்லை. ரஜினி சாருக்கு வலுவான ரசிகர்கள் இருக்கிறார்கள். காலா வெற்றியை அவர்கள் உறுதி செய்வார்கள்.

விரைவில் பார்ப்பார்கள்:
இது ரமலான் நோண்பு காலம் என்பதால், அவரது கணிசமான ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு வாய்ப்பு குறைவு. மிக விரைவில் காலாவை பார்ப்பார்கள்.

வாய்ப்புகள் பிரகாசம்:
இவ்வளவு சீக்கிரம் படத்தின் வசூல் பற்றி ஒரு முடிவுக்கு வருவது தவறு. வரும் நாட்களில் வசூல் அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விஷால் பேட்டி:
நேரடியாகச் சொல்லாவிட்டாலும், காலா படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்த்ததைவிடக் குறைவு தான் என்பது விஷால் பேட்டி மூலம் தெரிய வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications