'கபடி வெற்றி அம்மாவுக்கு சமர்ப்பனம்'.. வெற்றியை ஜெயலலிதாவிற்கு அர்ப்பணித்த கபடி வீரர் சேரலாதன்
கபடி போட்டியில் பெற்ற வெற்றியை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சமர்ப்பனம் செய்வதாக கபடி வீரர் சேரலாதன் கூறியுள்ளார்.
சென்னை: உலக கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற சேரலாதன், இன்று சென்னை திருப்பிய உடன், அப்போலோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
குஜராத்தில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை கபடி போட்டியில் இந்தியா, ஈரானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா தொடர்ந்து 3வது முறையாக உலக கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. வெற்றி பெற்ற இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சேரலாதன் இன்று சென்னை திரும்பினார்.

அவருக்கு விமானநிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து நேராக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சேரலாதன் சென்றார். அங்கு அவர், சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் சேரலாதன் கூறியதாவது:
உலக கோப்பை கபடியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் முதல்வரை பார்க்க வந்தேன். அவரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வரின் உடல் நலம் நன்றாக தேறி வருவதாக மருத்துவர்கள் கூறினார்கள். விரைவில் அவர் வீடு திரும்புவார். அவர் முழு குணமடைய இறைவனை வேண்டுகிறேன். கபடி போட்டியில் பெற்ற வெற்றியை முதல்வருக்கு சமர்ப்பனம் செய்கிறேன். ஜெயலலிதா விளையாட்டுத் துறைக்கு அதிக உதவிகளை செய்துள்ளார் என்று சேரலாதன் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications