கைல வாளி இருந்தாலும் வாய்ல கபாலிதான் பாஸு..!
சென்னை: ரொம்ப நாளாச்சு மாமே.. இம்மாம் பெரிய பரபரப்பை பார்த்து.. அவுங்க இன்னா வேணும்னாலும் சொல்லிக்கினு திரியட்டும்.. சும்மா சொல்லக் கூடாது நைனா.. ரஜினி ரஜினிதான்.. எவ்ளோ பரபரப்பு.. எவ்ளோ டென்ஷன்.
இன்னிக்கு நேத்து இல்லை தலீவா.. பா. ரஞ்சித்தான் அடுத்த படம் நம்ம சூப்பர் ஸ்டாரை வச்சு அப்படின்னு நியூஸ் வந்துச்சு பாரு.. அத்தொட்டு ஆரம்பிச்சது இது.. இன்னிக்கு உச்சத்துல போய்னுகிது. "அபிராமி அபிராமி" ரேஞ்சுக்கு மாறிக்குது நம்ம கபாலி ஜூரம்.
படத்தை எதிர்த்திக்கினு சில பேரு கீறாங்கோ.. அதை விடுங்க. அதெல்லாம் நமக்குத் தேவையில்லை.. வெயிட்டா நாலு மேட்டர் சொல்ட்டா...?

நெறிய பேருக்கு பாடி அப்படியே மேல பறந்தா மாதிரியே கீதாம்.. கபாலி ரிலீஸ் நெருங்க நெருங்க.. இன்னிக்கு மட்டும் இல்ல நைனா.. நெருப்புடா டீசர் வந்துச்சு பாரு.. அன்னிக்கு ஆரம்பிச்சது இந்த "பாடி புளோட்டிங்".. தா.. இன்னும் இறங்கவே இல்லையாம்.
பறந்துக்கினேதான் எல்லாமே.. தூங்குறது, நடக்கிறது, பேசுறதுன்னு.. அவ்ளோ ஒரு பரவசம் மாமே இதுல.. மெய்யாலுமே இது மாஜிக்தான் மச்சா.. ரஜினி மாஜிக்.
அணு அணுவா அந்த டீசரை ரசிக்கிறது.. அந்த வசனத்தைச் சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறது.. அப்பால,, கபாலிடான்னு டப்ஸ்மாஷ் போட்டு கலக்கிறது. சான்ஸே இல்லை மச்சி.. செம்ம மஜாவா கீது. இன்னா மேட்டர்னா.. இதைப் பார்த்து எதிர்த் தரப்பு கூடாராமெல்லாம் செம காண்டாகிக் கிடக்குதாம்.. அதுக்கு இன்னா பண்றது.. அதுதான் மச்சி ரஜினி கெத்து!
ரொம்ப நாளாச்சு ரஜினி படத்துக்கு இம்மாம் பெரிய பரபரப்பு வந்து. இதுக்கு முன்னாடி கூட இப்படில்லொம் கிடையாதுண்ணா.. ஆனா கபாலிக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு மெர்சலன்னு மண்டைக்கு புரியவே மாட்டேங்குதுண்ணா..!
இருக்கலாம்.. புது டைரக்டர், அதுவும் வேகமான டைரக்டர்.. அதை விட கபாலிடான்னு ரஜினி சொன்ன அந்த ஸ்டைல் கீது பாரு.. சான்ஸே இல்லா மச்சா.. செம செம செம!
பஸ்ல போனா கபாலி. ஆபீஸ் போனா கபாலி.. வீட்ல டிவி பாக்க குந்தினு இருந்தா கபாலி.. சரி வோணாம்.. மாலுக்குப் போலாம்னா அங்கியும் கபாலி.. எல்லா இடத்திலயும் கபாலியா கீது மச்சான்... அட, கைல வாளியோட குளிக்க போனாலும் நம்ம வாய் நம்மையும் அறியாமலேயே கபாலிங்குதுபா!
மீமிஸு, ஜோக்ஸ், அனிமேஷன் அப்படின்னு விதம் விதமா அடிச்சு கலக்கினு கீறாங்க வேர்ல்ட் பூரா.. பல பேரு ஆபீஸுக்கு லீவு போட்டுட்டாங்கோ... பல ஆபீஸ்ல அவங்களே லீவு விட்டுக்கினாங்கோ.. கவர்மென்ட் ஹாலிடே விடாதது மட்டும்தான் பாக்கி நைனா... !
நீங்க வோணா நல்லா உங்க ஐபேட்ல எழுதி வச்சுக்குங்க.. மெகா மெகா ரெக்கார்ட் படைக்கப் போறார் நம்ம கபாலி.. அடிச்சுச் சொல்றேன் நைனா.. சும்மா பூந்து கலக்கி புலியாட்டம் ஆடப் போறாரு நம்ம கபாலி!
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications