ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் படம் கபாலி! - பிரிமியர் ஷோ ரிசல்ட் இது
சூப்பர் ஸ்டார் ரஜினியின் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிப் படம், மிக முக்கியமான படம் கபாலி என்று, படத்தின் பிரிமியர் எனப்படும் சிறப்புக் காட்சி பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.
உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த ரஜினியின் கபாலி படம் நேற்று சிறப்புக் காட்சி மூலம் வெளியானது.

படத்தின் முதல் பிரிமியர் காட்சி மலேசியாவில் உள்ள பெடரல் ஹாலில் நேற்று இரவு நடந்தது. அதே நேரத்தில் சிங்கப்பூரிலும் சிறப்புக் காட்சி நடந்தது.
தொடர்ந்து சில மணி நேரங்களில் பிரான்ஸின் ரெக்ஸ் அரங்கம், அமெரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் கபாலி சிறப்புக் காட்சிகள் நடந்தன. பிரிட்டனிலும் சிறப்புக் காட்சிகள் நடந்தன.
இந்தக் காட்சிகளைப் பார்த்த மக்கள் படத்துக்கும் படத்தின் நாயகன் ரஜினிக்கும் பாராட்டு மழைப் பொழிந்து வருகின்றனர்.
ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படம் கபாலி என்றும், இதுவரை அவர் பார்த்த வெற்றிகளிலேயே மிகப் பெரிய வெற்றி கபாலிதான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சிலர் இந்தப் படத்தை நூறு பாட்ஷா + முள்ளும் மலரும் படங்களுக்குச் சமம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் படம் ரஜினிக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தரும் என்பது பல ரசிகர்களின் ஏகோபித்த கருத்து.
ரஜினியின் ஸ்டைல், உடல் மொழி, ஆக்ஷன் எல்லாமே இந்தப் படத்தில் புது மாதிரியாக இருப்பதாகவும், அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனும் அளவுக்கு மிக கம்பீரமாக ரஜினி காட்சியளிப்பதாகவும் பெரும்பான்மை ரசிகர்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தப் படம் ரஜினி ரசிகர்களையும் தாண்டி, வெகு ஜனங்களுக்கும் மிகவும் பிடித்த படமாக உள்ளதாக ஒட்டுமொத்தமாக தெரிவித்துள்ளனர்.
கபாலியின் சிறப்புக் காட்சி மூலம் கிடைத்துள்ள இந்த ரிசல்ட் தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்வைத் தந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications