மலாய் மொழியில் 400 திரையரங்குகளில் இன்று 'கபாலி' ரிலீஸ் !!
சென்னை: கபாலி படத்தின் மலாய் வெர்ஷன் 400 திரையரங்குகளில் இன்று ரிலீஸ் செய்யப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். கபாலி திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை ரிலீசானது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் 'கபாலி' படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பெரும்பாலானவை 'ஹவுஸ்புல்' காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கும் இப்படம், தொடர்ந்து நல்ல வசூலைத் தந்து வருகிறது. உலகம் முழுவதும் ஒரே நாளில் கபாலி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கபாலி படத்தின் மலாய் வெர்ஷன் நாளை வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், கபாலி திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தாணு, கபாலி படத்தின் மலாய் வெர்ஷன் நாளை ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மலேசியாவில் உள்ள 400 தியேட்டர்களில் கபாலி நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது. விரைவில் சீனா மற்றும் ஜப்பான் மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications