கபாலி முதல் வார வசூல் ரூ.389 கோடி - தயாரிப்பாளர் தாணு தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் வசூலில் தினமும் ஒரு சாதனைப் படைத்து வருகிறது. இந்தப் படம் வெளியான ஏழாவது நாளில் ரூ 389 கோடியைத் தாண்டியுள்ளது என தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.
கபாலி திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தாணு கூறுகையில், கபாலி வெளியாகிய ஏழு நாட்களில் ரூ.389 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. நூறு வருட சினிமா வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனை.

ரூ 500 கோடி வசூலை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் எட்டிவிடும் என மகிழ்ச்சி தெரிவித்தார். அவ்வாறு 500 கோடியை தாண்டினால், கபாலிதான் ரஜினியின் திரையுலக வாழ்க்கையிலேயே அதிக தொகையை வசூலித்த திரைப்படம்.












Click it and Unblock the Notifications