கபாலி டீசரை அதிமுகவுக்கு எதிராக திருப்பிவிட்ட உடன்பிறப்பு!
சென்னை: ரஜினிகாந்த் நடித்தும் விரைவில் திரைக்கு வர உள்ள கபாலி திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு, உலகமெங்கும் ரஜினி ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த வரவேற்பை பயன்படுத்தி வாக்கு கேட்க திமுக உடன்பிறப்பு ஒருவர் யூடியூப்பில் அந்த டீசரை டப் செய்து, ரஜினிகாந்த் திமுகவுக்கு ஆதரவாக பேசுவதை போல மாற்றியுள்ளார்.
இந்த வீடியோவில், ரஜினி சிரிப்பது, நெருப்புடா என வரும் வரி போன்றவை மாற்றப்படவில்லை. ஆனால், நடுவே அவர் பேசிய டயலாக்குகள் மாற்றப்பட்டு, அதிமுகவை விமர்சனம் செய்வது போல டப்பிங் கொடுத்துள்ளார் அந்த உடன்பிறப்பு.

ஜெ. மீது தாக்கு
எப்போதுமே மக்களுக்கு நல்லது செய்யாம, சென்னை மழை வெள்ளம் வந்தபோது கூட ஹெலிகாப்டர்ல சுத்தி திரிந்தார் ஜெயலலிதா என்பது போன்ற வசனம் அதில் வருகிறது.

திமுகவுக்கு ஷொட்டு
எப்போதுமே மக்களுக்கு நல்லது செய்து, சுய மரியாதையோடு வாழும் திமுக என்று கூறும் ஒரு வசனமும் அதில் வருகிறது.
பவ்யமாக கும்பிடு
நம்பியார் கூப்பிட்டதும், கும்பிடு போடும் அடியாள் அல்ல என ரஜினி ஒரிஜினலாக சொல்லிய வார்த்தை இதில், அதிமுகவில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் கும்பிடு போடுவதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஜினியின் நடிப்பு இதற்கு ஒத்துப்போவதை போல உள்ளது.

தொழிலுக்கு புதுசா
டப்பிங் டீசரின் இறுதியில், ரஜினிகாந்த், கருணாநிதியுடன் அமர்ந்திருக்கும் போட்டோக்களும் இடம்பெற்றுள்ளன. கபாலி புகழை வைத்து, திமுகவுக்கு ரஜினி ஆதரவு அளிப்பதை போன்ற ஒரு மாய தோற்றத்தை இந்த டப்பிங் விளம்பரம் உருவாக்கியுள்ளது. ஆனால், டப்பிங் கொடுத்தவர் தொழிலுக்கு புதிது போலும். ஒலி அமைப்பில் தடுமாறியுள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications