கிகி டான்ஸ்.. ரெஜினாவுக்கு ‘வாவ்’ சொன்ன காஜல்.. போலீஸ் எச்சரிக்கை!
கிகி சாலன்ஞ்சிற்காக டான்ஸ் ஆடிய ரெஜினாவை நடிகை காஜல் அகர்வால் பாராட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: கிகி சாலன்ஞ் வீடியோ வெளியிட்ட நடிகை ரெஜினாவை, காஜல் அகர்வால் பாராட்டியுள்ளார். ஆனால், ஆபத்து விளைவிக்கும் இதுபோன்ற சவால்களை நடிகர், நடிகைகள் மேற்கொள்ள வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
பிரபல பாப் பாடகர் டிரேக்சின், 'ஸ்கார்பியன்' என்ற இசை ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல் 'இன் மை பீலிங்ஸ்', சமீபத்தில் ரிலீசாகி இணையத்தில் பெரும் வரவேற்பபை பெற்றது. இந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'இன் மை பீலிங்ஸ்' சாலஞ்ச் அல்லது 'கிகி சாலஞ்ச்' என்ற பெயரில் சமூகவலைதளத்தில் சவாலாக வைரலானது.
உலக அளவில் பிரபலமாகி வரும், இந்த சவாலில் ஓடும் காரிலிருந்து இறங்கி, அதன் ஓட்டத்துடனேயே டான்ஸ் ஆடிக் கொண்டு வரவேண்டும். இதன் பின்னணியில் 'கிகி நீ என்னை விரும்புகிறாயா' என்ற பிரபலமான ராப் பாடலும் இசைக்கப்படும்.

கிகி சாலஞ்ச்:
இந்த சவால் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு தங்களது வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அவர்களது வீடியோக்களைப் பார்த்து ரசிகர்களும் இதே முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

எச்சரிக்கை:
ஆனால், இந்த சவால் பார்ப்பதற்கு எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு ஆபத்தானது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடிய பலர், பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் போலீசார் இச்சவாலை செய்யக்கூடாது என பல்வேறு எச்சரிக்கைகளையும், ஆலோசனைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
|
வீடியோ:
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் நடிகை ரெஜினா தனது சமூகவலைதளப் பக்கத்தில் கிகி சாலஞ்ச் வீடியோவை வெளியிட்டிருந்தார். பாவாடை தாவணி கட்டியபடி, ஓடும் காரில் இருந்து இறங்கி சாலையில் அவர் நடனமாடியிருந்தார். படப்பிடிப்பு ஒன்றின் இடைவேளையில் இந்த வீடியோ படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

காஜல் பாராட்டு:
‘தென்னிந்தியப் பெண்களாலும் இந்த சவாலை மேற்கொள்ள முடியும்' என இந்தப் பதிவில் அவர் கூறியிருந்தார். ரெஜினாவின் இந்த வீடியோவைப் பார்த்து நடிகை காஜல் அகர்வால் பாராட்டியுள்ளார்.

அபாயம்:
ஆனால், நடிகர், நடிகைகள் இந்த சவாலை செய்ய வேண்டாம் என்றும், அவர்களைப் பார்த்து அவர்களது ரசிகர்களும் இந்த விபரீத சவாலை செய்து பார்க்கும் அபாயம் இருப்பதாகவும் போலீசார் எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications