கருணாநிதி 93வது பிறந்தநாள்... கோலாகல கொண்டாட்டம்- குவியும் வாழ்த்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 93வது பிறந்தநாள் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கோபாலபுரம் இல்லமும், அண்ணா அறிவாலயமும் மின் விளக்குகளால் ஒளிர்கின்றன.
கருணாநிதி தனது பிறந்தநாளையொட்டி, அதிகாலையில் சிஐடி காலனியில் உள்ள வீட்டில் கருணாநிதி மரக்கன்று நட்டார். அவருக்கு ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்ற கருணாநிதி, அங்கு பெற்றோர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். கருணாநிதிக்கு தயாளு அம்மாள், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழரசு மற்றும் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி தனது 13 வயதில் நீதிக்கட்சி அழகிரிசாமியின் பகுத்தறிவு பேச்சில் ஈர்க்கப்பட்டு பொதுவாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர், இன்று ஜுன் 3ம் தேதி 93வது வயதை தொட்டிருக்கிறார். அன்று முதல் இன்று வரை ஓய்வறியாக சூரியனாக உடன்பிறப்புக்களுடன் உரையாடி வருகிறார்.
கம்பீர நடை நடந்த போதும் சரி நடை தளர்ந்து வீல் சேரில் பயணித்தாலும் கொள்கை தளராமல் உறுதியோடு தமது கொள்கைகளைச் செயலாற்ற துடிக்கும் கருணாநிதி அனைவராலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படும் தலைவர்.
தந்தை பெரியாரைச் சந்தித்து திராவிடர் கழகத்திலிருந்து அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தவர். அறிஞர் அண்ணாவோடு இணைந்து திமுக-வை வளர்த்தெடுத்தவர். இன்று மிகப் பெரும் ஆலமரமாக வளர்ந்திருக்கும் திமுகவின் ஆணிவேர் கருணாநிதிதான் என்றால் மிகையாகாது.
1957ல் குளித்தலையில் வென்று சட்டமன்றத்துக்குச் சென்றவர், இன்று 2016 வரை தொடர்ந்து 60 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தோல்வியே பெறாத தலைவர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.
5முறை முதல்வராக பதவி வகித்தவர் தற்போது 13வது முறையாக சட்டமன்றத்துக்குச் செல்ல உள்ளார் கருணாநிதி.

கோலாகல கொண்டாட்டம்
கருணாநிதியின் 93வது பிறந்தநாளை திமுகவினர் நாடு முழுவதும் நலத் திட்ட உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சிஐடி காலனியில் மரக்கன்று
கருணாநிதி தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் சிஐடி காலனியில் உள்ள வீட்டில் மரக்கன்று நடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்றும் அதிகாலை 5 மணிக்கே மரக்கன்று நட்டார். அப்போது ராசாத்தி அம்மாள், கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கோபாலபுரத்தில் கேக்
கோபாலபுரம் இல்லத்தில் குடும்பத்தினர், உறவினர், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கருணாநிதி கேக் வெட்டினார். அப்போது திமுக பொருளாளரும் அவரது மகனுமாக ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.

தலைவர்களுக்கு மரியாதை
தொண்டர்கள் புடை சூழ மெரீனா கடற்கரைக்கு சென்ற கருணாநிதி, அங்கு அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை வேப்பேரியில் பெரியார் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பொதுக்கூட்டம்
கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து மற்றும் முன்னணியினர் வாழ்த்திப் பேசுகிறார்கள். கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார்.

நலத்திட்ட உதவிகள்
கருணாநிதியின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாடி வருகின்றன. சென்னையில் 18 நாட்கள் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
|
சமூக வலைத்தளங்கள்
கருணாநிதியின் பிறந்தநாளை #HBDKalaignar என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். தலைமுறைகள் உங்களின் பெருமையை பேசும் என்றும் பதிவிட்டு வாழ்த்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications