கொள்ளு பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி- வைரல் வீடியோவால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி
வீட்டுக்குள்ளேயே கொள்ளு பேரனுடன் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: வீட்டுக்குள்ளேயே கொள்ளுபேரனுடன் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருவதால் அவரது உடன்பிறப்புகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருணாநிதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் வெளியே வருவதில்லை, பொது நிகழ்ச்சிகளிலும் கட்சி பணிகளிலும் நேரடியாக பங்கேற்பதில்லை.
அவருக்கு பிடித்த முரசொலி பவள விழாவில் கூட அவர் பங்கேற்கவில்லை. ஆனால் சமீபகாலமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வாசல் வரை வந்தார் கருணாநிதி
கடந்த ஆண்டு கோபாலபுரத்தில் உள்ள வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தபோது அவரை வழியனுப்புவதற்காக வாசல் வரை வந்தார் கருணாநிதி.

அண்ணா அறிவாலயம்
அப்போது வெளியே திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார். மேலும் ஒரு நாள் இரவு திடீரென அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

மு.க. கையெழுத்து
அங்குள்ள வருகை பதிவேட்டில் "மு.க." என்று கருணாநிதி கையெழுத்திட்டார். இந்த முன்னேற்றங்களை பார்த்த அவரது உடன்பிறப்புகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பந்து வீசிய கருணாநிதி
இந்நிலையில் பேரன் அருள்நிதியின் மகன் மகிழனுடன் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. அவர் பந்து வீசுவதும் பேரன் பேட்டால் அடிப்பதும் இடம்பெற்றுள்ளன. இது தொண்டர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications