கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச மெசேஜ்? தவெக எம்எல்ஏ மீது தமிழிசை கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதாகப் பரவும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எம்எல்ஏ மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், திமுகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் (36), 2 மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் தவறான கண்ணோட்டத்தில் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியதாகவும், இரவு நேரத்தில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது.

இந்த விவகாரத்தை அறிந்த மூத்த அமைச்சர் ஒருவர், எம்எல்ஏவை நேரில் அழைத்து கலெக்டரிடம் வருத்தம் தெரிவிக்க வைத்து சமரசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

Kallakurichi Collector

அருள் விக்னேஷ் காட்டம்

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ், திமுக ஐடி விங் அரசியல் உள்நோக்கத்துடன் பொய்யான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் இதுகுறித்து அருள் விக்னேஷ் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. அதில், சமூக வலைதளங்களில் பரவி வருவது போன்ற தகவல்களை நான் பகிர்ந்ததில்லை. மக்கள் அளிக்கும் மனு தொடர்பான தகவல்கள் மட்டுமே அவரிடம் பரிமாறி இருக்கிறேன். என் மீது பொய்யான தகவலை பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்மோகன் பேட்டி

இதனிடையே, சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பாகத் தவறான செய்திகள் பரவுவது குறித்து புகார்கள் வந்தால் முழுமையான விசாரணை நடத்தப்படும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் பாரபட்சமின்றிச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க காவல்துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.. ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்" என்று பதிலளித்துள்ளார்.

எனினும், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பியதாக கூறப்படும் விவகாரம், பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் உண்டுபண்ணி வருகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

கனிமொழி கேள்வி

அந்தவகையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தனி பாதுகாப்பு அதிகாரி நியமிப்பதால் என்ன பாதுகாப்பு கிடைத்துவிடும் என்றும், இதற்கு முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜா அவர்களுக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் அவர்கள் விரும்பத்தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் அதிருப்தி

இது தொடர்பாக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், "பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும்.. அவர்கள் மீது பார்வை என்பது தவறான கண்ணோட்டத்தோடு சிலரால் அணுகப்படுகிறது என்று நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது. இத்தகைய கண்ணோட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.. இதில் உண்மை இருந்தால் உடனே யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

கட்சி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய் அவர்கள் இத்தகைய தங்களது கட்சியினர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்... இத்தகைய நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்.. மீறினால் தண்டிக்கப்பட வேண்டும்

அதே நேரம் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர் தான் நிச்சயமாக அப்படி நடக்கவில்லை என்கிறார்... எது உண்மை என்பது வெளிக்கொணரப்பட வேண்டும்" என்று தமிழிசை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+