கள்ளக்குறிச்சி HDFC வங்கி ஆவண பதிவாளர் பிரியா பார்த்த வேலை.. மகளிர் குழு லோன் பணத்தில் ரூ.1.21 கோடி?

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் வசூலித்த பணம் வங்கிக் கணக்கில் சேரவில்லை. இப்படி ரூ.1.21 கோடி பணம் கையாடல் செய்யப்பட்ட வழக்கில், வங்கியின் ஆவணப் பதிவாளராக வேலை பார்த்த பிரியா உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. வங்கியில் பணிபுரியும் சில அதிகாரிகளே, கையெழுத்துகளை போலியாக போட்டு கையாடல் செய்திருக்கும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் எச்.டி.எப்.சி. வங்கி கிளை இயங்கி வருகிறது. இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பழகன் மகன் அரவிந்தன் (41), பிராந்திய குழு தலைவராக பணிபுரிந்து வருகிறார்.

HDFC Bank Kallakurichi Priya Bank Fraud Case Self Help Group Loan Scam

இந்த வங்கியின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 430 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பெரும்பட்டையைச் சேர்ந்த வினோத்தின் மனைவி பிரியா, 29, ஆவணப் பதிவாளராக வேலை பார்த்து வந்தார்.

கள்ளக்குறிச்சி எச்.டி.எப்.சி. வங்கி

இந்நிலையில், இந்த வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் பணியில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து வங்கியின் பிராந்திய குழு தலைவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த அரவிந்தன், 41, போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. அப்போது வங்கியில் பணிபுரிந்த சிலர் மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் வசூலித்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரியவந்தது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்

குறிப்பாக, வங்கியின் விற்பனை அதிகாரிகளாக வேலை பார்த்த 2 பேர், 23 மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து பணம் வசூலித்திருக்கிறார்களாம்.. ஆனால், அந்த பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் ரூ.1 கோடியே 21 லட்சத்து 61 ஆயிரத்து 685 பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த மோசடியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தலைவிகளின் கையெழுத்துகளை போலியாக பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த முறைகேட்டில் வங்கியில் பணிபுரிந்த மேலும் சிலருக்கும் தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து விற்பனை அதிகாரிகளான வி.பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரசாந்த், 27, தென்கீரனூரைச் சேர்ந்த ஆர்.பிரசாந்த், 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

HDFC Bank Kallakurichi Priya Bank Fraud Case Self Help Group Loan Scam

வினோத் மனைவி பிரியாவும் கைது

அதேபோல், கடன் அதிகாரியாக வேலை பார்த்த சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முள்ளுவாடியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் கார்த்திக், 34, கடன் மேலாளரான ஆத்தூர் அப்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சீமராஜா மகன் சதீஷ்குமார், 37, காசாளரான கள்ளக்குறிச்சி சிறுவங்கூரைச் சேர்ந்த வேலு மகன் ரமேஷ், 33, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுடன் வங்கியின் ஆவணப் பதிவாளராக வேலை பார்த்த பெரும்பட்டையைச் சேர்ந்த வினோத்தின் மனைவி பிரியாவும், 29, கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 6 பேருமே இந்த பணம் கையாடல் வழக்கில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் வங்கியிலேயே இப்படி ஒரு மோசடி நடந்துள்ளது கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளை நம்பி பணப் பரிவர்த்தனை செய்யும் பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+