கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: திமுக வேட்பாளர் மலையரசன் வெற்றி! அதிமுக தோல்வி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த அதிமுக வேட்பாளர் குமரகுருவை புதிய வேட்பாளரான திமுகவின் மலையரசன் தோற்கடித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் மலையரசன் (திமுக), ஆர்.குமரகுரு (அஇஅதிமுக), தேவதாஸ் உடையார் (பாமக), ஜெகதீச பாண்டியன் (நாம் தமிழர்) உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த தொகுதி 2008ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. இதில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவள்ளி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) ஆகிய 4 தனி சட்டசபைகளும் இரு பொதுத் தொகுதிகளை கொண்டதுதான் இந்த கள்ளக்குறிச்சி.
இந்த தொகுதி திமுகவின் கோட்டை எனச் சொல்லப்படுகிறது. கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை திமுகவே ஆட்சி செய்திருந்தது. அது போல் 2008ல் தொகுதி பிரிக்கப்பட்ட பிறகு 2009ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் திமுக வேட்பாளரே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த காமராஜ் வென்றார். பிறகு 2019ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த பொன் கவுதமசிகாமணி வென்றார்.
2009 ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டால் நடந்த மூன்று தேர்தல்களில் திமுகவே அதிகமாக வென்றுள்ளது. இந்த முறை திமுக சார்பில் போட்டியிடும் மலையரசன் புதியவர். அதே நேரத்தில் உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியில் 3 முறை வென்ற அதிமுக மாவட்டச் செயலாளரான குமரகுரு முதல் முறையாக லோக்சபா தேர்தலுக்கு போட்டியிடுகிறார். எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவரான இவர், இந்த தொகுதியில் தேமுதிகவின் பலத்தோடு இறங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக காரணமே அதிமுக அரசுதான் என பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
அது போல் பாமக வேட்பாளர் தேவதாஸ், முன்னாள் எம்பியாவார். இவர் பாஜகவுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த 3 கட்சியின் பலத்துடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசனும் மல்லுகட்டியுள்ளார்.
2024 தேர்தல் முடிவு நிலவரம்:
கள்ளக்குறிச்சி தொகுதியில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போதிலிருந்தே திமுக வேட்பாளர் முன்னிலை வகித்தார். தற்போது மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் திமுக வேட்பாளர் மலையரசன் 5,61,589 வாக்குகளையும் அதிமுக வேட்பாளர் குமரகுரு 507805 வாக்குகளையும் பாமக வேட்பாளர் தேவதாஸ் ராமசாமி 73652 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதில் திமுக வேட்பாளர் மலையரசன் வெற்றியடைந்துள்ளார்.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ஆதி சங்கர் (திமுக)- 3,63,601
தனராஜ் (பாமக) - 2,54,993
எல்.கே.சுதீஷ் (தேமுதிக)- 1,32,223
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
கே.காமராஜ் (அதிமுக) 5,33,383
ஆர். மணிமாறன் (திமுக)- 3,09,876
வி.பி.ஈஸ்வரன் (தேமுதிக)- 1,64,183
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
கவுதம் சிகாமணி (திமுக) 7,21,713
எல்.கே. சுதீஷ் (தேமுதிக) 3,21,794
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications