முதல்வருக்கு உடல் நலக்குறைவு.. என் பிறந்தநாளைக் கொண்டாடாதீர்கள்.. கமல் கோரிக்கை
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவாக இருப்பதால் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் குறித்து அதிமுகவினர் கவலையுடன் உள்ளனர். பல்வேறு தரப்பினரும் மருத்துவமனைக்குச் சென்று முதல்வரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
நற்பணி இயக்கத் தோழர்கட்கோரரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய்த் தவிர்க்க வேணடுகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 23, 2016
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டில் நற்பணி இயக்கத் தோழர்கட்கு கோரரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய்த் தவிர்க்க வேணடுகிறேன் என்று அதில் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Wishing the hounarable CM of Tamilnadu a speedy recovery.
— Kamal Haasan (@ikamalhaasan) September 23, 2016
முன்னதாக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து பணிகளைத் திரும்ப பார்க்க வேண்டுவதாக கமல்ஹாசன் டிவிட் போட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ம் தேதி வருகிறது. வழக்கமாக அந்த நாளில் பல்வேறு நற்பணிகளில் ரசிகர்கள் ஈடுபடுவார்கள். கமல்ஹாசனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை அளிப்பார். கடந்த ஆண்டு தனது பிறந்த நாளின்போது தூய்மை இந்தியா இயக்கத்தில் கலந்து கொண்டார் கமல் என்பது நினைவிருக்கலாம்.
-
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications