இதுக்குத் தான் எங்க கமல் அப்பவே சொன்னாரு ‘மேகி’யை சேர்த்துக்காதீங்கனு...
சென்னை : மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான ரசாயனப் பொருட்கள் இருப்பதால், அதனை சில மாநிலங்கள் தடை செய்துள்ளன. தமிழகத்திலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. விரைவில் தடை விதிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், இந்த மேகி விவகாரம் நெட்டிசன்களின் வாய்களுக்கு அவலாக வாய்த்துள்ளது. இதனை வைத்து தான் தற்போது அவர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

அதன்படி, கமல் பஞ்சதந்திரம் படத்தில் பேசும் டயலாக்கை வைத்து ஒரு மீம்ஸ் தயாரித்திருக்கிறார்கள்.
அந்த புகைப்படத்தில் கமல், ரம்யாகிருஷ்ணன், யூகி சேது, ஸ்ரீமன் மற்றும் ஜெயராம் எல்லாம் நிற்க, கூடவே இந்த வசனமும், ‘மேகிய எல்லாம் சேர்த்துக்கவே கூடாதுனு கமல் பஞ்ச தந்திரம்லேயே சொல்லியிருப்பாரு' என கூறப்பட்டுள்ளது.
பொதுவாக உலகில் பரபரப்பைக் கிளப்பக் கூடிய விஷயங்களை முன்னதாகவே தனது படங்களில் கமல் கூறி வருகிறார் என இணையத்தில் ஒரு பேச்சு உள்ளது. அன்பே சிவம் படத்தில் அவர் சுனாமி பற்றி பேசினார், இந்தியாவை சுனாமி தாக்கியது, தசாவதரம் படத்தில் மர்மநோய் குறித்து பேசினார் உலகை எபோலா தாக்கியது என அவர்கள் கூறுவதுண்டு.
அந்தவகையில், பஞ்சதந்திரம் படத்தில் ரம்யாகிருஷ்ணனின் பெயர் மேகி. அப்படத்தில் அவரை தங்கள் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளவேண்டாம் என கமல் கூறுவதைக் குறிப்பிட்டு இவ்வாறு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications