மக்கள் தீர்ப்பை சசிகலா மதிக்க வேண்டும், ஓ.பி.எஸ் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும்.. கமல்ஹாசன்
மக்கள் தீர்ப்பை சசிகலா மதிக்க வேண்டும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியைத் தொடர வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.,
சென்னை: மக்கள் தீர்ப்பை சசிகலா மதிக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து ஆட்சியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா டுடேவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ஓ.பன்னீரசெல்வத்துக்கு அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் அளித்த பேட்டியின்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா குறித்து எனக்கு எந்த பாரபட்சமும் கிடையாது. ஆனால் தற்போதைய நிலையில் நான் முதல்வரை ஆதரிக்க விரும்புகிறேன். காரணம், அரசியலில் அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

சசிகலாவின் திறமை குறித்து எனக்குத் தெரியாது. அவர் எதையும் செய்ததாக தெரியவில்லை. மறைந்த முதல்வருடன் இருந்துள்ளார். அதுவே அரசியல் தகுதியாகுமா என்று எனக்குத் தெரியவில்லை.
முதல்வர் பன்னீர் செல்வம் திறமையற்றவர் என்று கூற முடியாதவர். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். சசிகலா மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். ஓ.பன்னீர் செல்வம் எந்த பாதிப்பையும் யாருக்கும் ஏற்படுத்தவில்லை. திறமையாளர் என்று கமல் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications