ராமநாதபுரத்திலிருந்து அதிரடியாகக் கிளம்பும் "மண்ணின் மைந்தன்" கமல்! #kamalhassan

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சொந்த ஊரில் அதிரடியாக அரசியல் களம் இறங்கும் கமல்

    சென்னை: நடிகர் கமல்ஹாசனும் தீவிர அரசியலுக்கு வருகிறார். அதை தனது சொந்த மண்ணான ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அவர் தொடங்குவவது கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    கமல்ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடி. இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. தனது சொந்த ஊரை உள்ளடக்கிய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக கமல் அறிவித்துள்ளார்.

    கமல்ஹாசனின் கட்சிப் பெயர் என்ன, அவர் என்ன மாதிரியான கொள்கைகளை மக்களிடம் வைக்கப் போகிறார், என்ன சொல்லி மக்கள் ஆதரவைத் திரட்டப் போகிறார் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

    மக்கள் அரசியலில் கமல்

    மக்கள் அரசியலில் கமல்

    மக்களுக்குத் தேவையான அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டியவர் கமல். எண்ணூர் கழிமுகப் பிரச்சினையில் அவர் களம் இறங்கியது பல அரசியல்வாதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது. அந்தப் பிரச்சினையே அதன் பிறகுதான் அனைவராலும் பார்க்கப்பட்டது.

    கட்சியை அறிவிப்பதில் தாமதம்

    கட்சியை அறிவிப்பதில் தாமதம்

    அதிரடி அரசியலில் குதித்தாலும் கூட தனது கட்சிப் பெயர், கொள்கைகள் உள்ளிட்டவற்றை அறிவிக்காமல் இருந்தார் கமல். இதுகுறித்துக் கேட்டபோது நான் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறேன். விரைவில் மற்ற விவரங்கள் அறிவிக்கப்பட்டும் என்று கூறி வந்தார் கமல்.

    மக்கள் சந்திப்பு

    மக்கள் சந்திப்பு

    இந்த நிலையில் தற்போது தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார் கமல். பிப்ரவரி 21ம் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

    சொந்த மண்ணிலிருந்து

    சொந்த மண்ணிலிருந்து

    தனது சுற்றுப்பயணத்தை தனது பூர்வீகமான ராமநாதபுரம் மண்ணிலிருந்து தொடங்குகிறார் கமல். பரமக்குடிகாரரான கமல்ஹாசன் தனது சொந்த மாவட்டத்திலிருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. ராமநாதபுரத்தில் கமலுக்கு மிகப் பெரிய ஆதரவுக் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மாஸ் காட்ட ரெடியாகும் ரசிகர்கள்

    மாஸ் காட்ட ரெடியாகும் ரசிகர்கள்

    கமல்ஹாசனுக்கு உள்ள செல்வாக்கை வெளிக்காட்டும் வகையில் அவர் சுற்றுப்பயணம் செய்யவுள்ள ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் கூட்டங்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆட்களைத் திரட்ட ரசிகர்கள் தயாராகி வருகின்றனராம். ஆயத்தப் பணிகள் தொடங்கி விட்டனவாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+